மொபைல் வழி தேடல்களே அதிகம்: கூகுள் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2015
00:00

இந்தியாவில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் வழியாக மேற்கொள்ளப்படும் தேடல்களைக் காட்டிலும், மொபைல் போன்கள் வழியாக வரும் தேடல்களே அதிகமாக உள்ளன என்று கூகுள் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் போன்கள் அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் கிடைக்கின்றன. மேலும், இணைய இணைப்பிற்கான திட்டக் கட்டணங்களும் மக்கள் பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளன. எனவே தான், மொபைல் வழித் தேடல்கள் அதிகமாக உள்ளன என்று காரணத்தையும் கூகுள் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களை சாதாரண மக்கள் வாங்க இயலாத விலையில் இருந்தபோது, மொபைல் போன் வழித் தேடல்கள் 25%க்கும் குறைவாகவே இருந்தன. சென்ற ஆண்டில், இருவகைத் தேடல்களும், ஏறத்தாழ சமமாகவே இருந்து வந்தன. ஆனால், இந்த ஆண்டில், மொபைல் போன் பயன்பாடு அதிகரித்ததனால், இவ்வழித் தேடல்களே அதிகமாக உள்ளன.
இந்தியாவில், நடப்பு ஆண்டில், மொபைல் பயன்பாடு அதிக வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2015 முதல் ஆறு மாதங்களில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 35 கோடி என்ற அளவில் இருந்தது. இவர்களில், 65% பேர், மொபைல் வழியில் இணையத்தை அணுகுகின்றனர். கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, மொபைல் வழி தேடல்கள் அந்நிறுவனத்திற்குச் சாதகமாகவே அமைந்துள்ளன. பேஸ்புக் தளத்தில், மொபைல் விளம்பரங்களை அதிகம் செயல்படுத்த முடிகிறது.
இணையம் மற்றும் மொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்பும் (Internet and Mobile Association of India (IAMAI) இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என்றும், இவர்களில் 49 கோடி பேர், மொபைல் வழி இணையத்தை நாடுவார்கள் என்று அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை, இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு நல்ல தளத்தைக் கொடுத்துள்ளது. உலக அளவில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை இந்தியா கொண்டுள்ளது. இதனால், கூகுள் மற்றும் இணையத்தில் விளம்பரங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும் இது பொன்னான வாய்ப்புகளைத் தரும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இதனால், விளம்பரம் தர எண்ணும் நிறுவனங்கள், தங்கள் முதல் விருப்பமாக, மொபைல் வழி இணைய தளங்களில் விளம்பரத்தினைத் தர திட்டமிடுகின்றனர்.
இதனாலேயே, கூகுள் நிறுவனம், தன்னை அணுகும் நிறுவனங்களிடம், அவர்கள் இணைய தளத்தின், மொபைல் பதிப்பினையும் அவசியம் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு வருகிறது. அதாவது, மொபைல் வழிக்கு அணுக்கமாக இல்லாமல் இணைய தளங்களை வைத்துள்ள நிறுவனங்கள், மக்கள் மனதில் இருந்து நீங்கிவிடுவார்கள் என்று கூகுள் சரியாகக் கணித்து தெரிவித்துள்ளது. இந்த அணுக்கத்தினையே ஆங்கிலத்தில் 'Mobilegeddon' என்று அழைக்கின்றனர்.
இந்திய நிறுவனங்களும், தங்கள் நிறுவனத்தின் இணைய தளங்களை, மொபைல் போன் இணையத்திற்கு ஏற்ற வகையில் அமைத்து வருகின்றனர். இந்த வகையிலும் ஒரு தொழில் பிரிவு தனியே உருவாகி உயர்ந்து வருகிறது.
பல முன்னணி வர்த்தக இணைய தளங்கள், தங்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், மொபைல் வழி இணைப்பினையே பயன்படுத்தும்படியான கட்டாய சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
எனவே, இனிமேல், மொபைல் வழியில் தான், நாம் இணையத்தை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதற்கேற்ற வகையில் நம் பயன்பாட்டினையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X