இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மற்றும் ஸ்நாப்சேட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2015
00:00

அண்மையில் உலகளாவிய ஓர் ஆய்வு மையம் (Pew Research Centre) தான் மேற்கொண்ட மொபைல் போன் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர்கள் வாட்ஸ் அப் மற்றும் ஸ்நாப் சேட் (WhatsApp மற்றும் Snapchat) போன்ற செய்திகளை உடனுடக்குடன் அனுப்ப வழி தரும் செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருவதாகக் கண்டறிந்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரில், வாட்ஸ் அப், கிக் அல்லது ஐமெசேஜ் போன்ற செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 17% பேர் இது போன்ற செய்திகளை அனுப்பிய பின்னர், தானாக அழித்திடும் Snapchat or Wickr போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில், 49% பேரின் வயது 18 முதல் 29க்குள் இருக்கிறது. 41% பேர், தகவல்கள் அனுப்பப்பட்டவுடன், படித்தவுடன் அழித்திடும் செயலிகளை அதிகம் விரும்புகின்றனர். இந்த செயலிகள் அனைத்துமே பயன்படுத்த இலவசமாக இணையத்தில் கிடைப்பவை ஆகும். இவற்றை வை பி மூலம் இணைக்கும்போது, அவை எஸ்.எம்.எஸ். அல்லது அது போன்ற டேட்டாவினைப் பயன்படுத்துவது இல்லை. மேலும், இவை பேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களைப் போல வழக்கமாகச் செயல்படுவது இல்லை. மிகவும் தனிப்பட்ட முறையில், மற்றவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வசதிகளை அளிக்கின்றன. இந்த தனிப்பட்ட மறைவுத் தன்மை, வழக்கமாக இயங்கும் சமூக இணையதளங்களில் இல்லை என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X