விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் பதிவதில் பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2015
00:00

மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் இருந்து முறையற்ற வகையில் சாப்ட்வேர் புரோகிராம் நகல்களைப் பயன்படுத்துவோரைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம் வெளியானதில் இருந்து, இந்த நடைமுறையைத் தீவிரமாகவே ஏற்படுத்தி வருகிறது. தற்போது, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், எந்த புரோகிராமினை காப்பி செய்து பயன்படுத்தினாலும், அதனை இயங்கவிடாமல் செய்திடும் டூலை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சரியான பாதையைக் காட்டும் நல்ல செயலாகும். நம் மக்கள் இதனை உணர்ந்து நகல் எடுத்து சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தும் வேலையை விட்டுவிட வேண்டும்.
என். தியாகராஜன், மதுரை.

ஹார்ட் டிஸ்க் பயன்பாடு மற்றும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த டிப்ஸ்கள் அடங்கிய கட்டுரை மிகவும் விரிவாகவும், பயனுள்ள வகையிலும் தரப்பட்டுள்ளது. இனி, நம் வாசகர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் நிச்சயம் கவனமான முறையில் அணுகுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக, நாமாக ஏற்படுத்தும் சேதம் என்ற தலைப்பின் கீழ் கொடுத்துள்ள டிப்ஸ் அருமை. அனைத்திற்கும் நன்றி.
பா. இளவரசன், திருச்சி.

''ஆல்பபெட் அறிவிப்பில் ஓர் ஆச்சரியம்” என்ற கட்டுரையில் தந்ததைப் படித்து, நீங்கள் மிக விளக்கமாகக் கூறியபடி சென்று பார்த்ததில் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். இதனை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பதைக் காட்டிலும், உடனே நம் வாசகர்களுக்கு அறிவித்து மகிழ்ந்தது இன்னும் சிறப்பு. இப்படியெல்லாம் டிஜிட்டல் உலகில் இருக்கும் என்பது புதிய ஆச்சரியம் தரும் தகவலாகும்.
ஓ. ஜெயந்தி மனோகர், சென்னை.

''மெதுமிட்டாய்” ஆப்பரேட்டிங் சிஸ்டம் என நீங்கள் வைத்த பெயர் தமிழில் நல்ல இடத்தைப் பெறும். சரியான பெயர் தான்.
எஸ். ஏகாம்பரம், திருவொற்றியூர்.

விண்டோஸ் 95 குறித்த கட்டுரை மிகவும் உணர்ச்சி பூர்வமான கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. அந்த நாட்களை அசை போட வைத்தது. எவ்வளவு பெரிய மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டு செயல்பட்டிருக்கிறோம் என்பது வியப்பாக உள்ளது. கட்டுரை ஆசிரியருக்கு பாராட்டுகள்.
என். இராமானுஜம், சென்னை.

விண்டோஸ் 10 நிச்சயம் பயனாளர்களின் மனதில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இடம் பிடித்த இயக்க முறைமையாக அமையும். தொடர்ந்து இதனை இன்ஸ்டால் செய்திடும் மக்களின் எண்ணிக்கை உயரும். விண்டோஸ் 7, விண் 8 வைத்திருப்பவர்கள், சற்று காலம் செல்லட்டும் எனக் காத்திருக்கின்றனர்.
ந. அன்புச் செல்வி, கோவை.

மின் அஞ்சல் பயன்பாட்டினை முதல் முறையாக மேற்கொள்பவர்களுக்கு உங்களின் கட்டுரை நல்ல பாடமாகும். அனைத்து விஷயங்களையும் கவர் செய்வதாக அமைந்துள்ளது.
பேரா. எஸ். சந்திர சேகரன், மதுரை.

வெகு நாட்களாக, எனக்கும் என் குரோம் பிரவுசரில், பி.டி.எப். பைல்கள் ஒரு டேப்பில் திறக்கப்பட்டு கஷ்டத்தைக் கொடுத்து வந்தது. உங்கள் பதில் குறிப்பைப் படித்த பின்னரே, இப்படியும் உள்ளதா என்று கற்றுக் கொண்டு மாற்றிவிட்டேன். தகவலுக்கு நன்றி.
எம். சிராஜுதீன், திண்டுக்கல்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X