கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2015
00:00

கேள்வி: மொபைல் போன்களின் அம்சங்கள் குறித்து எழுதுகையில் அக்ஸிலரோ மீட்டர் உள்ளது என எழுதுகிறீர்கள். இது ஸ்மார்ட் போன்களில் உள்ளது எனவும் குறிப்பிடுகின்றீர்கள். இந்த மீட்டர் எந்த செயல்பாட்டிற்கு உள்ளது. ஏதேனும் காட்டுமா? அல்லது டூல் போல செயல்படுமா? நான் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் வாங்க இருக்கிறேன். அதில் இது கட்டாயம் இருக்குமா? எப்படி தெரிந்து கொள்வது?
ஏ.கே. ஏகாம்பரம், மேல்மருவத்தூர்.
பதில்:
அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்பது, ஸ்மார்ட் போனில் இயங்கும் ஒரு தொழில் நுட்பம். ஒரு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகையில், அதனைப் பல கோணங்களில் திருப்புவோம். எந்த பக்கம் போன் திருப்பப்படுகிறது என்பதனை இந்த தொழில் நுட்பம் உணர்ந்து, அதற்கேற்றார்போல், போனில் உள்ள திரைக் காட்சியை நமக்குக் காட்டுகிறது. இதில் இரண்டு வகை காட்சித் தோற்றங்கள் உண்டு. அவை, போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப். சுருக்கமாக, நெட்டு வாக்கு மற்றும் பக்க வாக்கு எனக் கொள்ளலாம். அக்ஸிலரோமீட்டர் தொழில் நுட்பம், இதனை உணர்ந்து நமக்குக் காட்சிகளைக் காட்டுகிறது. இதனைப் பெற Screen Rotation என்ற வசதியை செட்டிங்ஸ் மூலமாக இயக்க நிலையில் வைக்க வேண்டும். இதே தொழில் நுட்பம் மேலும் சில மேம்பாட்டுடன் கைரோஸ்பிக் சென்சார் எனவும் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட் போன் எடுத்துக் கொள்ளும் மாற்று நிலைகளை மிகத் துல்லியமாக எடுத்து, கணித்து, அதற்கேற்ப செயல்படுகிறது. நீங்கள் வாங்க இருக்கும் போனின் மாடல் எண் என்ன என்பதைக் கூறவில்லை. அதனைத் தெரிந்து கொண்டு, இணையத்தில் தேடினால், இந்த தொழில் நுட்பங்கள் அதில் தரப்பட்டுள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம். சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் இவை இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் செல்களில் உள்ள டெக்ஸ்ட்டில், எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கும் வழிகள் உள்ளனவா? சில வேளைகளில் நன்றாகத் தெரிய இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். யுவராஜ், சேலம்.
பதில்:
சுருக்கமாகச் சொல்வதென்றால், எக்ஸெல் ஒர்க் புக்கில் உள்ள செல்களில், சொற்களின் எழுத்துக்களிடையே உள்ள இடைவெளியை மாற்ற இயலாது. வேர்ட் புரோகிராமில், இதே போல டேபிளில் செல்களில் உள்ள சொற்களின் எழுத்துகளின் இடையே உள்ள இடைவெளியை மாற்ற வழிகள் உள்ளன. ஆனால், எக்ஸெல் ஒர்க்புக்கில் இயலாது. ஆனாலும், சில வேலைகளை மேற்கொள்வதன் மூலம், இதனை மேற்கொள்ளலாம். அந்த சொல்லை வெவ்வேறு எழுத்து வகை (Font) யில் அமைத்துப் பார்க்கலாம். ஒவ்வொரு எழுத்து வகையும், ஒவ்வொரு கேரக்டர் இடைவெளியை அமைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
ஒன்றுக்கொன்று மாறுபட்ட வடிவமைப்பினைக் கொண்ட ஒரே வகை எழுத்தின் உருவங்களை அமைத்துப் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, Arial என்றால், Arial, Arial Narrow, Arial Black, Arial Rounded என்ற எழுத்துவகைகளில் குறிப்பிட்ட சொல்லை அமைத்துப் பார்க்கலாம். உங்களுக்கு எது நன்றாக இடைவெளியுடன் தெரிகிறதோ, அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்களாக, எழுத்துகளுக்கு இடையே இடைவெளியை உருவாக்கினால், அது சிக்கலில் முடியும். குறிப்பாக, எண்களில், இலக்கங்களுக்கு இடையே இடைவெளி உருவாக்கக் கூடாது.

கேள்வி: என் வேர்ட் புரோகிராமில், திடீரென அதுவரை கிடைத்து வந்த மினி டூல் பார் தெரிவதே இல்லை. நானாக எதனையும் மாற்றவில்லை. இது எப்படி ஏற்பட்டது என்றும் புரியவில்லை? இதனைத் திரும்பப் பெற எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். அல்லது எம்.எஸ்.ஆபீஸ் கூட்டுத் தொகுப்பினையே மாற்றி ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?
ஆர். கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்.
பதில்
: ஒரு சின்ன பிரச்னை. இதற்கு ரீ இன்ஸ்டால் வரை யோசிக்கிறீர்கள். நீங்கள் இல்லாத போது, உங்கள் கம்ப்யூட்டரில் வேர்ட் செயலியைப் பயன்படுத்தியவர்கள், மினி டூல் பார் செயல்படுவதை நிறுத்தி இருக்கலாம். அதனால் என்ன? சில செயல்பாடுகளிலேயே அதனை மீண்டும் கொண்டு வரலாம். நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் என்ன பதிப்பு (வேர்ட் 2007 / 2010) என்று நீங்கள் குறிப்பிடவில்லையே. பரவாயில்லை. இரண்டுக்குமான குறிப்புகளைத் தருகிறேன்.
இந்த மினி டூல் பார், நமக்கு வேர்ட் 2007ல் தான் தரப்பட்டது. மிகவும் பயனுள்ள டூல் பார். வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த மினி டூல் பார் தானாகத் தோன்றும். நாம் அந்த சொல்லின் பார்மட்டை மாற்ற (அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட, எழுத்தின் அளவு மற்றும் நிறம் மாற்ற) இதனைப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள மெனு செல்ல வேண்டியதில்லை. இதன் இயக்கத்தினை மீண்டும் கொண்டு வர தேவைப்படும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Optionsகிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbarஎன்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் பயன்படுத்துவது ஆபீஸ் 2010 தொகுப்பாக இருந்தால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் இயக்கத்தின் மாறா க்ளவ்ட் சேமிப்பு இடமாக ஒன் ட்ரைவ் மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கான இடத்தின் அளவு எவ்வளவு? கட்டணம் செலுத்தி வாங்குவதென்றால் எந்த அளவு வரை அனுமதிக்கப்படுகிறது. இலவசமாக என்றால் எவ்வளவு?
என். ஜோதிக்குமார், கோவை.
பதில்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நல்லதொரு டிஜிட்டல் உலக சேவை என ஒன் ட்ரைவ் வசதியைக் கூறலாம். யாரும் இதனை முதல் நிலையில் இலவசமாகப் பயன்படுத்தலாம். கட்டணம் இன்றி, இதில் 15 ஜி.பி. வரை, நம் பைல்களை சேவ் செய்திடலாம். முன்பு, இதில் சேமிக்கப்படும் பைல் ஒன்றின் அளவு, 2 ஜி.பி.க்கு மேல் இருக்கக் கூடாது என்ற வரையறை இருந்தது. ஆனால், அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. பைல் ஒன்றின் அளவு 10 ஜி.பி. வரை இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, செப்டம்பரிலிருந்து இது அமலில் உள்ளது. மீடியா, அறிவியல், கட்டடக்கலை மற்றும் பொறியியல் துறை சார்ந்த பைல்களின் அளவு மிகப் பெரியதாக உள்ளதால், சேமித்திடும் பைலின் அளவினையும் மைக்ரோசாப்ட் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இப்போது பல பயனாளர்கள், ஹை டெபனிஷன் பார்மட்டில் உள்ள திரைப்படங்களை இதில் சேமித்து வைக்கின்றனர். படம் ஒன்றின் பைல் அளவு 4 அல்லது 5 ஜி.பி.க்கு மேல் இருக்கும் என்பதாலும், மைக்ரோசாப்ட் இந்த முடிவு எடுத்திருக்கலாம்.
ஆனால், இதில் சேமித்து வைத்துப் பழக்கம் உடையவர்கள், என்றைக்கு அளவை எட்டுகிறார்களோ, அன்று கட்டணம் செலுத்தி, இடம் வாங்கிட முயற்சிப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டண செயலியான, ஆபீஸ் 365 தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு, ஒன் ட்ரைவில் பைல் சேமிக்க ஒரு டெரா பைட் அளவு இடம் தரப்படுகிறது. இது ஏறத்தாழ அளவற்ற நிலையே.

கேள்வி: கேப்சா டெஸ்ட் (CAPTCHA) என்பது என்ன? இதனைப் பல இணைய தளங்களில் நம்மைப் பதிகையில் சந்திக்க நேரிடுகிறது. இதனால் யாருக்கு என்ன பயன்? இதனை ஸ்கிப் செய்து போக முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
அ.நடராஜ மூர்த்தி, கோவை.
பதில்:
Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதன் சுருக்கமே CAPTCHA ஆகும். நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் தானாக எதனையேனும் படிவத்தில் நிரப்புகிறதா? அல்லது நீங்களே தகவல்களை நிரப்புகிறீர்களா என்ற தகவலை உறுதி செய்திடவே இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கேப்சா சோதனை. அதனால் தான், இது மனிதன் மட்டுமே படித்து நிறைவேற்றும் செயலாக உள்ளது. பலருக்குக் கடினமாகவும் உள்ளது. உங்களால் ஒரு சோதனையைச் சரியாக அமைக்க இயலவில்லை என்றால், உடனே வேறு ஒரு கேப்சா படம் கேட்டு வாங்கலாம். இதற்கான லிங்க் இதன் கீழேயே இருக்கும். இதனை ஸ்கிப் செய்து போக இயலாது.

கேள்வி: நான் விண்டோஸ் 8.1 பயன்படுத்தி வருகிறேன். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், வலது பக்கம் கீழாக, கடிகாரம் காட்டப்படும் இடத்தின் இடது மூலையில், ENG AND DVR என்ற எழுத்துகள் காட்டப்படுகின்றன. அதில் ரைட் கிளிக் செய்தால் ENG us எனக் காட்டப்படுகிறது. இதனை முழுமையாக English எனக் காட்ட நான் எடுக்கும் எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இது எதனால் ஏற்பட்டுள்ளது?
ஆர். மரிய ஜேசுதாஸ், புதுச்சேரி.
பதில்
: உங்களுடைய விரிவான கடிதத்திலிருந்து, நீங்கள் குறிப்பிடும் உங்கள் கம்ப்யூட்டரில், இன்னொரு மொழிக்கான பயன்பாட்டினையும் இன்ஸ்டால் செய்துள்ளீர்கள் என்று தெரிய வருகிறது. இந்த மொழிப் பயன்பாடு உங்களுக்குத் தேவை இல்லை என்றால், கண்ட்ரோல் பேனல் சென்று, Region and Language அல்லது Clock Region and Language என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். English தவிர அதன் கீழாக ஏதேனும் ஒரு மொழியைத் காணப்பட்டால், அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Remove என்பதைக் கிளிக் செய்திடவும். கூடுதலாக இன்னொரு மொழி இல்லாத பட்சத்தில் இந்த ENG AND DVR என்ற எழுத்துகள் எல்லாம் காட்டப்படாது.

கேள்வி: எனக்கு வழங்கப்படும் ஐ.பி. முகவரியை எப்படித் தெரிந்து கொள்வது? எப்போதும் எனக்கென்று மட்டும் தனி ஐ.பி. முகவரி தரப்படுமா?
என்.ஜவஹர், புதுச்சேரி.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டர் இணையத்திற்கான இணைப்பில் இருக்கையில், http://whatismyipaddress.com/ என்ற இணைய தளம் செல்லவும். சில விநாடிகளில், உங்களுக்கான ஐ.பி.முகவரி, இணைய சேவை வழங்கும் நிறுவனம், நீங்கள் இயங்கும் ஊரின் பெயர், நாடு ஆகியவை காட்டப்படும். இணைய இணைப்பில் இருக்கையில் http://whatismyipaddress.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். உடன் உங்களுக்கு திரையில், உங்களின் ஐ.பி. முகவரி காட்டப்பட்டு, உடன், ISP, Services, City, Region மற்றும் Country என்று வரிசையாகத் தகவல் கிடைக்கும். இதில் ஐ.எஸ்.பி. என்பதில் உங்களுக்கு இணைய இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயர் காட்டப்படும். அடுத்து சர்வீசஸ் என்பதில், நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட வசதி பெற்றிருந்தால் அது காட்டப்படும். இல்லை எனில் காலியாக விடப்படும். அல்லது None Detected என்று காட்டப்படும். Region என்பதில் Tamilnadu என்றும், Country என்பதில் India என்றும் காட்டப்படும். உங்களுக்கென, உங்களுக்கு மட்டும் என தனி ஐ.பி. முகவரி வேண்டும் என்றால், அதற்கெனத் தனியே கட்டணம் செலுத்திப் பெறலாம்.
ஐ.பி. முகவரி தெரிந்து கொள்ள இன்னொரு வழியும் உண்டு. இணைய இணைப்பில், கூகுள் தேடுதளம் பெறவும். இதில் ip address அல்லது ip அல்லது my ip என டைப் செய்து எண்டர் தட்டவும். உடன் உங்கள் ஐ.பி. முகவரி காட்டப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar - viruthunager,இந்தியா
10-செப்-201514:15:11 IST Report Abuse
sundar நெட்வொர்கில் APN எப்படி மாற்றி அமைத்தல் இலவசமாக இன்டர்நெட்டை use பண்ணலாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X