வாட்ஸ் அப்: தொடர்ந்து பயன்படுத்தும் 90 கோடி பேர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2015
00:00

சென்ற நான்கு மாதங்களில், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியைப் 10 கோடி பேர் புதிய வாடிக்கையாளர்களாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்ற ஆண்டில் மட்டும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் பயனாளர் எண்ணிக்கை 50% உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மாதந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு மாதத்தில் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 90 கோடியாக உள்ளது. இந்த தகவலை, வாட்ஸ் அப் தலைமை நிர்வாக அலுவலர் கெளம், https://www.facebook.com/jan.koum/posts/10153580960970011 என்ற முகவரியில் உள்ள தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்ற ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 80 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 10 கோடி பேர் கூடுதலாகத் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டில் இதன் மொத்த வளர்ச்சி 50% ஆகும்.
பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனத்தை 1,900 கோடி டாலர் கொடுத்து, தனதாக்கிக் கொண்ட பின்னர், இந்த வளர்ச்சி பல மடங்காகப் பெருகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த பயனாளர்கள் எண்ணிக்கை 60 கோடி என இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இது 70 கோடியானது.
பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு தான். ஒரு மாதத்தில்தொடர்ந்து பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 144 கோடி ஆகும். இது ட்விட்டர் பயனாளர்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும்.
வாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் அதன் தலைமை அதிகாரி கெளம் மற்றும் அவரின் வல்லுநர் குழுவாகும்.
அவர்களைப் பாராட்டுவோம் என பேஸ்புக் நிறுவனர் மார்க் தன் வலைமனைச் செய்தியில் (https://www.facebook.com/zuck/posts/10102343581241201) கூறியுள்ளார்.
வாட்ஸ் அப், 2009 ஆம் ஆண்டு, அடிப்படையில் டெக்ஸ்ட் மெசேஜ் வசதியினை வழங்கும் தளமாகத் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், வாய்ஸ் டெக்ஸ்ட் பதிந்து அனுப்பும் வசதி கூடுதலாகத் தரப்பட்டது. ஒவ்வொரு மொபைல் சாதனத்திலும் இது இயங்கும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டது. குரல் வழிஅழைக்கும்
வசதியும் தரப்பட்டது. இதுவே, ஸ்கைப் மற்றும் வைபர் செயலிகளுடன் போட்டியிட வைத்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X