பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2015
00:00

அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தலைமைப் பதவிகளில் பணி புரியும் இந்தியர்கள் படித்த கல்வி நிலையங்களைக் கவனித்தால் ஒன்று புலப்படும். பெரும்பாலானவர்கள், இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் அல்லது அதற்கு இணையான கல்வி நிலையங்களில் படித்திருக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் அது போன்ற கல்வி நிலையங்கள் உள்ளதே பல மாணவர்களுக்கு, ஏன், ஆசிரியர்களுக்கே தெரியாது. நகரங்களில் மட்டுமே, இந்த கல்வி நிலையங்களின் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள பயிற்சி தரும் மையங்கள் உள்ளன. முதலில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இதன் சிறப்பினை எடுத்துக் கூறி, ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தர வேண்டும். ஆங்கில மொழி அறிவினையும், பயன்பாட்டுத் திறனையும் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு செயல்பட்டால், நிச்சயம் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள், இந்திய தொழில் நுட்ப கழகங்களில் சேர்ந்து பயனடைவார்கள். உலக அளவில் புகழ் பெறுவார்கள்.
பேரா. டாக்டர் எம்.தமிழரசன், மதுரை.

இவ்வுலகில் உள்ள அனைவரையும் பேஸ்புக்கில் இணைப்பேன் என்ற இலக்குடனும், இலட்சியத்துடனும் செயல்பட்டு வரும், இதன் நிறுவனம் மார்க் ஸ்க்கர்பர்க்கிற்கு, ஒரே நேரத்தில் 100 கோடி பேர் இதனைப் பயன்படுத்தினார்கள் என்பது, அவர் இலட்சியப் பாதையில் கடந்த ஒரு வெற்றி மைல் கல்லாகும். இலவசமாக அனைவருக்கும் இந்த வாய்ப்பினைத் தந்து, நம் சமூக வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய அவருக்கு நன்றி சொல்வோம்.
டி. நித்யா ராணி, திண்டுக்கல்.

இனி, மொபைல் ஸ்மார்ட் போன்களே நாம் பயன்படுத்தும், கம்ப்யூட்டர்களாகவும், மொபைல் போன்களாகவும் செயல்படும் என்ற நிலையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உங்கள் கட்டுரையில் உள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன. தகவலுக்கு நன்றி.
பேரா. இரா. செல்வக்குமார், சென்னை.

''கூகுள் தேடுகையில் பயன்படுத்த” என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள ஷார்ட்கட் கீகள் அனைத்தும், நன்றாக மனதில் பதியும் வண்ணம், எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. எழுதியவருக்குப் பாராட்டுகளும், நன்றியும்.
ஏ. பரமேஸ்வரன், திருநகர்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மக்கள் விரும்பாததற்குக் காரணம், புதிய வசதிகள் என்ற பெயரில், பல இம்சையான அம்சங்கள் இருந்ததுதான். விண் 10ல் அவை நீக்கப்பட்டது நல்லதுதான். இதனை அறிந்து எழுதிய கட்டுரை ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
நீ. அன்புச் செல்வன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஜிமெயிலின் ஆவணக் காப்பகம் என்றவுடன் புதிய வசதி என்று எண்ணிப் படித்தேன். ஏற்கனவே உள்ள ஆர்க்கிவ் குறித்து என்றாலும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் அறியாமல் இருந்ததனால், கட்டுரையில் தந்த தகவல்கள் அனைத்தும் புதியனவாகவே இருந்தன. இவ்வளவு வசதிகளை ஜிமெயில் தருகிறது என்பது வியப்பாக உள்ளது. இன்னும் பரவலாகத் தெரியாத வசதிகள் குறித்து இன்னும் டிப்ஸ் தரவும்.
எஸ். மாலதி பொன்ராஜ், சேலம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X