அதிகரிக்கும் பி.எஸ்.என்.எல். இணைய வேகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 செப்
2015
00:00

இந்தியாவில் இணைய இணைப்பு வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களாக, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடக்க காலம் தொட்டு, இணைய இணைப்பினை வழங்கி வருகிறது. தற்போது, இதன் தரைவழி தொலைபேசி மூலம் இணைய இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இணைப்பு வேகத்தினை, குறைந்த பட்சம் 2 Mbps அளவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இது வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். இதன் மின் அஞ்சல் இன்பாக்ஸ் அளவும் 50 எம்.பி. என்ற அளவில் இருந்து 1 ஜி.பி. ஆக உயர்கிறது. தொலைபேசி மற்றும் இணைய சேவைப் பிரிவுகளில், தனியார் நிறுவனங்களின் போட்டி இருப்பதால், இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும், பல்வேறு கூடுதல் சிறப்பு வசதிகள் மூலம், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முடிவுகளை எடுத்து அமல்படுத்தி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன், பி.எஸ்.என்.எல். நிறுவனம், தன் தரைவழி தொடர்பு தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை, எந்த நெட்வொர்க் தொலைபேசிக்கும் இலவசமாகப் பேசலாம் என அறிவித்து அந்த சலுகையினை வழங்கி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கும் முன்னர், தங்களின் மொபைல் இணைப்பினைப் பெற்றவர்கள், இந்தியா முழுவதும், ரோமிங் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம் என்ற சலுகையினை வழங்கியது. இந்தியாவின் எந்த மாநிலம் சென்றாலும், அழைக்கப்படும் மற்றும் அழைக்கும் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இணைய இணைப்பின் வேக அதிகரிப்பு, ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இணைய இணைப்பு பெற்றவர்களுக்கும், இனி பெறப்போகிறவர்களுக்கும் தரப்படும்.
இந்தியாவில் முதன் முதலாக, பிராட்பேண்ட் இணைப்பினை வழங்கியவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகும். 2005 ஆம் ஆண்டு 256 kbps வேகத்தில் இணைப்பினை வழங்கித் தன் சேவையினைத் தொடங்கியது.
தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனம், 2 mbps முதல் 100 mbps அளவிலான வேகத்தில், இணைய இணைப்பினை வழங்கும் பல திட்டங்கள் மூலம் சேவையினை வழங்கி வருகிறது. தற்போது இதன் இணைய சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1 கோடி ஆகும். இவர்களில் 11 லட்சம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
கிராமப் புறங்களில், அரசின் கொள்கை முடிவேற்கேற்ப சலுகைக் கட்டணத்தில் இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும், பணியில் இருக்கும் மற்றும் பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது.
தற்போதைய இணைய இணைப்பின் குறைந்த பட்ச வேகம் அதிகரிக்கப்படுவதால், அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணைப்பினைப் பெறுவார்கள் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்நிறுவனத்தின் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 7.7 கோடி ஆகும்.
1.6 கோடி பேர் வயர் இணைப்பு மூலம் தொலைபேசி இணைப்பினைக் கொண்டுள்ளனர். இவர்களில் 1 கோடி பேர் வயர் இணைப்பு தொலைபேசி வழியாக இணைய இணைப்பினைப் பெற்றுள்ளனர்.
மேலும் தகவல்கள் பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் 1500 ஐத் தொடர்பு கொள்ளலாம். வேறு நிறுவனங்களின் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்கள், 1800 345 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணைய தளத்தினைக் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran Eswaran - Palani,இந்தியா
23-செப்-201500:07:50 IST Report Abuse
Eswaran Eswaran இதோ இப்போது நான் எழுதுவதை ஒரு கம்ப்லெஇண்டாகவெ பி எஸ் என் எல் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம்.கிராமத்துக்குச் சலுகை விலையில் தருவதாகக் கூறிவிட்டு படிப்படியாக கடந்த இரு ஆண்டுகளில் கட்டணம் ஒண்ணரை மடங்காக ஆகி விட்டது. அரசு ஊழியர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி 20% என்பது எந்த வித முன்னறிவுப்புமின்றி 10% ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது. பிராட்பேண்ட் வைத்திருப்பவர்கள் ஒரு சில இடங்களைத் தவிர பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.மொபைல் இன்டர்நெட் எல்லா இடங்களிலும் மிகவும் சுலோ. BSNL க்குக் கொடுக்கும் காசு வேஸ்ட். கிராமப்பகுதிகளில் உள்ள எக்செஞ்சுகளில் பாடவதியான பேட்டரிகளையே சிக்க வைத்துள்ளார்கள்.மின்சாரம் நின்றால் அவ்வளவுதான். இந்த லட்சணத்தில் தனியார் செல்லுலார் கம்பெனிகளுக்கு பி எஸ் என் எல் டவரை ஷேர் செய்து கொண்டுள்ளார்கள்.இதில் இணைக்கப்பட்டுள்ள தனியார் செல் நெட்வொர்க் நன்றாக உள்ள அதே சமயம் BSNL சரிவர செயல்படுவதில்லை. தனியார்கள் வழங்கும் ரேட் கட்டர் சலுகைகள் பொல BSNL கொடுப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X