பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 செப்
2015
00:00

விண்டோஸ் 95', விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த குறிப்புகளுடன் மிகவும் பயனுள்ள வகையில் அன்று என்ன நடந்தது என்பதை மிக அழகாகக் காட்டியுள்ளது.
ஆர். சிவராஜன், திருப்பூர்.

அனைவருக்கும் சரியான, இணையான இணைய இணைப்பு தரப்பட வேண்டும் என்பதில், அனைத்து அமைப்புகளும், மக்களும் ஒரே பக்கம் உள்ளனர். இந்த சேவை தரும் நிறுவனங்கள் தான், அதிக லாபம் ஈட்ட, அனைத்து பிரிவுகளிலும் பணம் ஈட்ட துடிக்கின்றன. நாமும், அரசும் இதில் உறுதியாக இருந்தால், அனைத்து மக்களும் இதனால் பயனடைவார்கள். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.
டி. பிரேம் கலா, சென்னை.

ஆப்பிள் நிறுவனம் எதைச் செய்தாலும், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, அதே நேரத்தில் மிகப் பிரம்மாண்டமாகத்தான் செய்திடும் என்பது, அந்நிறுவனம் உருவாக்கி வரும் அதன் தலைமையகக் கட்டடத்தின் அம்சங்களிலிருந்து தெரிய வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இது குறித்து கண்ட கனவுகளை, அவரின் அலுவலர்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். ஒரு நல்ல தலைவனுக்கு அழகு அதுதான். ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மனித இனத்திற்கு நல்ல வகையில் தொண்டாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
டாக்டர் என்.பாலகிருஷ்ணன், மதுரை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தில் ஐ.பி. முகவரி மட்டுமின்றி, அது சார்ந்த அனைத்து தகவல்களும் தரப்படுவது சிறப்பு. குறிப்பிற்கு நன்றி.
ஆ.மூர்த்தி பெருமாள், திருநெல்வேலி.

ஆப்பிள் வளாகம் 2 என்பது, அதன் பிரம்மாண்ட கட்டடத்திற்கு மட்டுமின்றி, அங்கிருந்து நமக்குக் கிடைக்கும் தொழில் நுட்ப சாதனங்களுக்காகவும் புகழ் பெறும். எப்படி விண்டோஸ் மூலம், சமுதாயத்தின் பல மாற்றங்களுக்கு, மைக்ரோசாப்ட் வழி வகுத்ததோ, அதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களும் இனி நம் வாழ்க்கையின் முக்கிய பாதைகளை நமக்கு வகுத்துத் தரும்.
எஸ். ப்ரீத்தி, கோவை.

கேள்வி பதில் பகுதியில், மொபைல் போனில் இயங்கும் அக்ஸிலரேட்டர் செயல்பாடு குறித்து அளித்த விளக்கம் அருமை. ஸ்மார்ட் போனில் உள்ள வசதிகள் எல்லாம், தேவையற்றவை என ஒரு சாரார் இன்றும் கூறி வரும் நிலையில், ஒவ்வொரு வசதியும், ஸ்மார்ட் போனின் சிறப்பான செயல்பாட்டிற்கு மெருகூட்டுகின்றன என்பது, உங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொல்லும்போதுதான் தெரிகிறது.
டி. மார்ட்டின் எபநேசர், புதுச்சேரி.

நமக்கு இலவசமாக க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இத்தனை தளங்கள் உள்ளன என்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது. நான் ஒன் ட்ரைவ் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். மற்றவற்றையும் பயன்படுத்த முயற்சிகளை எடுப்பேன்.
என்.சுகுமாறன், திருப்பதி.

விண்டோஸ் 10 நம் இணைய இணைப்பினை நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தும் என்பது மிகவும் மோசமான ஒரு செயல்பாடாகும். மைக்ரோசாப்ட் இது போல எல்லாம் தன் சிஸ்டத்தை வடிவமைக்கும் என்பது நம்ப முடியாததாக உள்ளது.
கா.தமிழ்ச் செல்வன். தஞ்சாவூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X