சாம்சங் கேலக்ஸி ஜே 1 ஏஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 செப்
2015
00:00

பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போன்களை, அவ்வப்போது சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அண்மையில் Samsung Galaxy J1 Ace (J110H) என்ற பெயரில், அதிக பட்ச விலையாக ரூ.6,400 எனக் குறிப்பிட்டு, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை 4.3 அங்குல அளவில், 480 x 800 பிக்ஸெல் திறனுடன், Super AMOLED டிஸ்பிளே வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களில், இத்தகைய திரையினைக் காண முடியாது. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ஸ்டோரேஜ் 4 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ராம் மெமரி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுமா என்பது ஐயமே. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்த கேலக்ஸி ஜே 1 மொபைல் போனைப் போலவே வடிவமைப்பும், வசதிகளும் உள்ளதாக, இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் திறன் இணைந்த, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாகத் தரப்பட்டுள்ள செல்பி கேமரா 2 எம்.பி. திறன் உடையதாக உள்ளது. இதன் பரிமாணம் 130.1 x 67.6 x 9.5 மிமி. எடை 128 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gururaj Kumaresan - Chennai,இந்தியா
21-செப்-201515:27:15 IST Report Abuse
Gururaj Kumaresan இதை விட அதிக specs கொண்ட phone கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன உதாரணத்திற்கு Redmi 2 prime வெறும் 6999 ரூபாய்க்கு கிடைக்கிறது. சாம்சங் இன் marketing strategy மிகவும் செயலிழந்து கிடக்கிறது இதிலிருந்து மிக தெளிவாக தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X