ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2010
00:00

இணையப் பக்கங்களை டவுண்லோட் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் மற்றும் தேவையற்றவை இருந்து வந்தன. அவற்றை எல்லாம் நீக்கி, பி.டி.எப். கோப்பாக அதனைப் பெறுவது குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
–சி. கே. மூர்த்தி, தேவாரம்
விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது? என்ற கட்டுரையைப் படித்த பின்னரே, சிஸ்டம் இயங்குவதில் இவ்வளவு உள்ளதா என்று அறிய முடிந்தது.
–கா. கிருத்திகா, மதுரை
எது எப்படி தொடங்கினால் என்ன சார்? நமக்கு வேண்டியது கம்ப்யூட்டர் நன்றாக இயங்க வேண்டும். சிஸ்டம் பைல்களை எல்லாம் அறிந்து கொண்டால், கேடு நமக்குத்தான்.
–கி. தமிழ்மாறன், திண்டுக்கல்
நம் பைல்களை, குறிப்பாக வீடியோ ஆடியோ பைல்களைத் திறக்க முயற்சிக்கையில், ஏதேனும் ஒரு புரோகிராம் இதனை டிபால்ட் ஆக மாற்றவா எனக் கேட்கும். எதற்காவது யெஸ் சொல்லிவிட்டால், அடுத்து பிரச்னை தரும். விருப்பப்பட்ட புரோகிராமில் திறக்க என்ற கட்டுரையைப் படித்து, இதனை எப்படித் தீர்ப்பது என்று அறிந்து கொண்டேன்.
–பேரா. கா.ஸ்ரீதர், மதுரை
மிகச் சிறிய விஷயங்கள் ஆனாலும், உங்களுக்குத் தெரியுமா? பகுதி பல ஆர்வமூட்டும் தகவல்களைத் தருகிறது. அவசியம் தொடரவும்.
–பே. உலகநாதன், சென்னை
வேர்ட் டிப்ஸ் பகுதியில், குரல் வழிகாட்டி அமைப்பது சரியான தகவல். என் பிள்ளைகளுக்கு வேர்ட் டாகுமெண்ட்களை அனுப்புகையில் என்னுடைய வழிகாட்டுதலை குரலாகப் பதிந்து அனுப்ப முடிகிற.
–கா. திரவியம், விருதுநகர்
கம்ப்யூட்டரில் வைரஸ் என்று அடிக்கடி உஷார் படுத்தும் செய்திகளைத் தருகிறீர்கள். பதட்டத்தைத் தணிக்கும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.
–என். சாருலதா, புதுச்சேரி.
டேப்ளட் பிசிக்கள் உலகை மாற்றும் என்கிறார்களே. இவை குறித்து அதிகம் எழுதுங்களேன்.
–சி. உலகநாதன்,  கோவை
மொபைல் மெசேஜ் ஸ்டோர் செய்வது, பாதுகாப்பு கருதி தான் என்றாலும், அநேகமாக 85% குப்பை மெசேஜ் ஆகத்தான் இருக்கும். இது போன்றவற்றை தேங்கவிடாமல், தானாக நீக்கும் வழியையும் கண்டறியலாம்.
–ஏ.கே. ஷண்முகநாதன், திண்டிவனம்
யூனிகோட் எழுத்து முறை குறித்த தங்களின் விளக்கம் சற்று கூடுதல் தகவல்களைத் தந்தது. கேள்வி பதில் பகுதியில் ஆசிரியர் விளக்கம் அளிப்பது போலவே உள்ளது.
–ஆ. சிவசண்முகம், கல்லூரி முதல்வர்,  சென்னை
அடம் பிடிக்கும் பைல்களை அழிக்கும் வழிகள், காலத்தே பயனளிக்கும் குறிப்பு. சில பைல்களை என்ன செய்தாலும் போகாது. சரியாகத்தான் தலைப்பிட்டுள்ளீர்கள்.
–எஸ். ஆர். ருக்மிணி, மதுரை
பேஸ்புக்கில் குரூப் வசதி புதியதாக இருந்தாலும், அமைக்கும் வழிகள் எப்போதும் போல் தான் உள்ளன. இருப்பினும் தகவலுக்கு நன்றி.
–க. சிதம்பரம், சிவகாசி

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathishkumar.s - chengalpattu,இந்தியா
17-நவ-201021:45:52 IST Report Abuse
sathishkumar.s உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X