லெனோவா ஸ்டிக் பெர்சனல் கம்ப்யூட்டர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 செப்
2015
00:00

ஸ்டிக் வடிவில், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முழுமையான செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டிக் கம்ப்யூட்டர்களைத் தற்போது, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. முதன் முதலில், இண்டெல் நிறுவனம் இதனை வெளியிட்டு, அடிக்கடி பயணங்களில் உள்ளோர் பயன்படுத்த எளிதான சாதனம் என்ற பெயரை நிலைப்படுத்தியது. அந்த வரிசையில், தற்போது லெனோவா நிறுவனம் ஸ்டிக் கம்ப்யூட்டர் ஒன்றை, Lenovo ideacentre Stick 300 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இது தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. இந்தியாவில் இதனை Stick PC 300 என லெனோவா அழைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,999.
இது குறித்த தகவல்கள் சென்ற ஜூன் மாதம் வெளிவந்தன. இது இண்டெல் நிறுவனம் வெளியிட்ட Intel Compute Stick போலவே தோற்றத்திலும், செயல்பாட்டிலும் உள்ளது. இதனை நம் டி.வி. அல்லது மானிட்டரில் உள்ள எச்.டி.எம்.ஐ. போர்ட்டில் இணைத்துவிட்டால், முழுமையான ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் நமக்குப் பயன்படுத்த கிடைக்கும்.
இந்த ஸ்டிக் பி.சி. 300 கம்ப்யூட்டர் ஸ்டிக்கில், குவாட் கோர் இண்டெல் நிறுவனத்தின் Baytrial Z3735F ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1. இதனை விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி.யாக உயர்த்தலாம்.வை பி மற்றும் புளுடூத் செயல்பாடுகள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன.
ஒரு எச்.டி.எம்.ஐ. போர்ட், ஒரு மைக்ரோ யு.எஸ்.பி. 2 போர்ட், பவர் போர்ட், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 100 x 38 x 15 மிமீ. எடை 65 கிராம்.
லெனோவா நிறுவனத்தின் அதிகார பூர்வ விற்பனை தளம் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X