பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 செப்
2015
00:00

கூகுள் இலச்சினை குறித்த கட்டுரை, அந்நிறுவனத்தின் பழைய சுவடுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் கட்டுரையாக உள்ளது. தகவல்களுக்கு நன்றி.
எஸ்.கே. உதயகுமார், தென்காசி.

நம் மாணவர்களுக்கு இன்றைய தேவை, அவர்களின் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் வழிகளே. பேட்டரி பாதுகாப்பு குறித்த தகவல்களைத் தந்தது போல, லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத்தினைப் பராமரிக்கும் வழிகளையும் பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.ஆசிர்வாதம், ஆசிரியர், மேலூர்.

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் இத்தனை வகைகள் உள்ளன என்பது தங்களின் கட்டுரையைப் படித்த பின்னர் தெரிந்து கொண்டோம். ஐ போனின் விலையைப் பார்த்துப் பின்வாங்குவோர் இருக்கும் சூழ்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனக்கு
இந்தியாவில் நல்ல விற்பனைச் சந்தை வேண்டுமானால், சாதனங்களின் விலையைக் குறைக்க வேண்டும். பின்னரே, அந்நிறுவனத்தின் சாதனங்கள் குறித்து மக்கள் அறிய விரும்புவார்கள்.
ஆ. சிதம்பரம், கடலூர்.

விண்டோஸ் 10 பைல்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மைக்ரோசாப்ட் நம் கம்ப்யூட்டரில் திணிக்கிறது என்பது புதிய தகவல். ஏதோ அப்டேட் என்ற முறையில், விண்டோஸ் 8.1க்கான பைல்கள் வருகின்றன என்று எண்ணியிருந்தேன். இந்த தகவல் கொண்டுள்ள பக்கத்தில், அழும் குழந்தைக்கு உணவூட்டும் படம் மிக அருமை. விரும்பாவிட்டாலும், தாய் உணவு ஊட்டுவது போல, மைக்ரோசாப்ட் நடந்து கொள்கிறது என்ற கருத்தைக் காட்டுகிறது அந்த படம். அருமையான முயற்சி, கட்டுரை மற்றும் படம்.
எஸ். பன்னீர்செல்வம், கோவை.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தனக்கென ஓர் இடம் கொண்டு, தன் சாதனங்கள் அனைத்தையும் தனித்தன்மையுடன் கொண்டு வருவதில், ஆப்பிள் நிறுவனத்தை எட்டிப் பிடிக்க எந்த நிறுவனமும் முடியாது என்பது, ஆண்டு தோறும் அறிமுகப்படுத்தப்படும் இந்நிறுவனத்தின் சாதனங்கள் நிரூபித்து வருகின்றன. மிக தெளிவாக விளக்கம் அளித்த கட்டுரை எழுதியவருக்கு பாராட்டுகள்.
கே.எஸ். சத்தீஷ் குமார், சென்னை.

ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடு மிக வேகமாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், அவற்றின் பயன்களை முழுமையாகப் பயன்படுத்தும் குறிப்புகளைக் கொண்ட தங்கள் கட்டுரை, ஆண்ட்ராய்ட் மேனுவல் போல உள்ளது. ஆண்ட்ராய்ட் போன் விற்பனையை அதிகரிப்பதில், இந்த கட்டுரைக்கும் பங்கு உண்டு. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
என். சுகிர்தமலர், சேலம்.

பி.எஸ்.என்.எல். என்னதான் தன் பிராட்பேண்ட் வேகத்தினை அதிகரித்தாலும், வாடிக்கையாளரின் பின் சேவை விரைவாகக் கிடைக்கவில்லை என்றால், இணைய இணைப்பு சந்தையில் போட்டியிடுவது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கும். பைபர்நெட் நுழைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், பி.எஸ்.என்.எல்.இதனைத் தன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆர். சியாமளா, வேலூர்.

ஸ்டார்ட் அப்பிலிருந்து புரோகிராம்களை நீக்கிய பின்னரும், ஏன் புரோகிராம்கள் பெயர்கள் உள்ளன என்று நானும் குழப்பம் கொண்டிருந்தேன். தங்களின் பதில் அதற்கான விளக்கத்தினைத் தெளிவாகத் தந்துள்ளது. நன்றி.
எஸ். கே. உத்தமராஜ், திருச்சி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X