எல்.ஜி. கிளாஸ் 4 ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 செப்
2015
00:00

முழுவதும் உலோகத்தாலான உறைகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, எல்.ஜி. நிறுவனம், பல ஊகமான தகவல்களை அடுத்து வெளியிட்டுள்ளது. இதன் பெயர் LG Class. இதன் 5 அங்குல அளவிலான எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1280× 720 பிக்ஸெல் திறனுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளே தருகிறது. வளைவான ஓரங்கள் இருப்பதால், முப்பரிமாண விளைவினை காட்சித் தோற்றத்தில் காண முடிகிறது. இதனை இயக்கும் ப்ராசசர், குவாட் கோர் ஸ்நாப்ட்ரேகன் 64 பிட் ப்ராசசர் (Snapdragon 410 (MSM8916)) என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப். பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாய், எல்.இ.டி. ப்ளாஷ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமராவின் திறன் 8 எம்.பி. திறனுடையது. இந்த கேமராவில் Gesture Interval Shot, Beauty Shot போன்ற சில சிறப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன.
இதில் 2GB LPDDR3 ராம் மெமரி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 2 டெரா பைட் வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். ஒரு வாட் திறனுடைய லவுட் ஸ்பீக்கர் துல்லியமான ஒலியைத் தருகிறது. இந்த போனின் தடிமன் 7.4 மிமீ. எடை 147 கிராம். பரிமாணம் 142 x 71.8 x 7.4 மிமீ. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இதில் தரப்பட்டுள்ளன. உலோக உறைகள் இருந்தாலும், எடை குறைவாகவே உள்ளது இதன் சிறப்பு. பவர் பட்டன் மற்றும் ஒலி அளவுக் கட்டுப்பாட்டிற்கான பட்டன்கள், போனின் பின்புறத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் உள்ளாக இணைக்கப்பட்ட பேட்டரி 2,050mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்த குறிப்பினை எழுதும் வரை இதன் விலை அறிவிக்கப்படவில்லை. உத்தேசமாக ரூ. 22,475 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X