400 ரயில் நிலையங்களில் வை பி இணைய இணைப்பு: கூகுள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2015
00:00

இந்தியாவில் 400 ரயில் நிலையங்களில், அதிவேக வை பி இணைய இணைப்பினை வழங்கும் திட்டத்தினை கூகுள் நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை கூகுள் நிறுவனமும், அண்மையில் அந்த நிறுவனத்திற்குச் சென்ற இந்திய பிரதமர் மோடி அவர்களும் அறிவித்துள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், வரும் 2016க்குள், மிக அதிகப் போக்குவரத்து உள்ள 100 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இவற்றின் மூலம், நாளொன்றுக்கு ஒரு கோடி பயணிகளுக்கு, வை பி மூலம் இணைய இணைப்பு கிடைக்கும். கூகுள், இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் தற்போது இணைய இணைப்பினை பைபர் நெட்வொர்க் கட்டமைப்பு மூலம் வழங்கி வரும் கீச்டிடூகூஞுடூ என்ற அமைப்புடன் இணைந்து இந்த திட்டத்தினை மேற்கொள்ளும்.

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, இந்தியாவிலேயே மிகப் பெரிய வை பி இணைய கட்டமைப்பாக இருக்கும். இன்றைக்கு வழங்கப்பட்டு வரும், வை பி இணைப்பின் வேகத்தைக் காட்டிலும் மிக அதிகமான வேகத்தில் கிடைக்கும் இணைய இணைப்பாக இது செயல்படும்.
பயணிகள் காத்திருக்கும் நேரத்தில், தாங்கள் விரும்பும் விடியோவினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அல்லது இணையத்தில் இருந்தவாறே பயன்படுத்தலாம். தாங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஊர்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயணம் மேற்கொள்கையில் படிப்பதற்கும், விளையாடுவதற்கும் நூல்கள் மற்றும் விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்திடலாம். இந்த தகவல்களை, கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாகி, சுந்தர் பிச்சை வலைமனைப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். தற்போது 30 கோடி பேர் இந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இவர்களில் 10 கோடி பேர், சென்ற ஆண்டுதான் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், அதே நேரத்தில், இந்தியாவில் நூறு கோடி பேர் இணைய இணைப்பினைப் பயன்படுத்தாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்கு, இந்த புதிய திட்டம் இணையப் பயன்பாட்டினைத் தரும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் அதிகாரப்பூர்வ மொழியாக 22 மொழிகள் உள்ளன. அவை அனைத்தும் இணையத்தின் பயன்பாட்டு மொழிகளாக அமைய வேண்டும். அவை அனைத்திலும் இணையப் பயன்பாட்டினைக் கொண்டு வர சுந்தர் பிச்சை உறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X