எட்ஜ் பிரவுசரை வலியுறுத்தும் விண்டோஸ் 10
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2015
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிவு செய்து இயக்கி வருகிறீர்களா? அதன் மூலம், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரை, இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்திட முயற்சி செய்தால், உடன், மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரைப் பரிந்துரைக்கிறது என்ற வகையில், "Microsoft recommends Microsoft Edge for Windows 10," என்று ஓர் எச்சரிக்கை செய்தி வருகிறது. இதில் கிளிக் செய்தால், உடன் எட்ஜ் பிரவுசரின் சிறப்பான அம்சங்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. பிரவுசருக்கான போட்டியில், எட்ஜ் பிரவுசருக்கு நல்ல இடம் கொள்ள, மைக்ரோசாப்ட் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதுவரை நமக்குக் கிடைத்து நாம் இயக்கிவரும் பிரவுசர்களைக் காட்டிலும், புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில், புதிய வகை இஞ்சின் இயக்கத்தில், எட்ஜ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டு தரப்படுகிறது. இதனை, இங்கு குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசருடன், சில அம்சங்களின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர், விண்டோஸ் 10 சிஸ்டம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்தே தரப்படுகிறது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் அடுத்த வாரிசாகும். இதனைக் காட்டிலும் பல மேம்பாடு கொண்ட புதிய அம்சங்கள் எட்ஜ் பிரவுசரில் உள்ளன. இதனை ஆய்வு செய்த பல ஆய்வாளர்கள், எட்ஜ் பிரவுசர் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்குச் சரியான போட்டியைத் தரும் என்றும், பல விஷயங்களில், பல புதிய வசதிகளை எட்ஜ் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எட்ஜ் பிரவுசரில், இணைய தளங்களைக் காண்கையில், அதில் குறிப்புகளை, அந்த தளப்பக்கங்களிலேயே எழுதி வைக்கலாம். அடுத்த முறை, அதே தளத்தினைக் காண்கையில், அந்த குறிப்புகளுடன், அத்தளம் கிடைக்கும். மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரும், நம் தனிப்பட்ட துணைவன் கார்டெனாவுடன், எட்ஜ் பிரவுசர் இணைந்து செயல்படுகிறது. இதனால், இணையப் பக்கங்கள் மிக விரைவாகக் கிடைக்கின்றன.
குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில், தர்ட் பார்ட்டி புரோகிராம்களை எளிதாக இணைத்து இயக்க முடியும். அவை எந்த
கட்டமைப்பிலும் செயல்படும் வகையில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் போன், மேக் சிஸ்டம் என எதில் செயல்பட்டாலும், ஒரு முறை லாக் இன் செய்து, அனைத்து புக் மார்க்குகளையும் பெற்றுப் பயன்படுத்தலாம். ஆனால், இதுவரை, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் மட்டுமே செயல்படுகிறது.
இருப்பினும், எட்ஜ் பிரவுசரில் தரப்பட்டுள்ள பல மேம்படுத்தப்பட்ட வசதிகள், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு, மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தியவர்களை, எட்ஜ் பக்கம் இழுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில், 80% பயனாளர்கள், இன்டர்நெட் பிரவுசரையே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பின்னர், கூகுள் குரோம் பிரவுசர் அமெரிக்காவில் பிரபலமானது. சபாரி பிரவுசர் மூன்றாம் இடத்திலும், பயர்பாக்ஸ் நான்காம் இடத்திலும் இருந்தன. 2012ல், உலக அளவில், குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பின்னுக்குத் தள்ளியது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் கொண்டுள்ள மேம்படுத்தல்கள், பிரவுசரையும் தாண்டி நீட்டிக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7 பயனாளர்கள், இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்தினைத் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொள்ளலாம். இதனால், குறிப்பிட்ட அளவு வருமானத்தினை, மைக்ரோசாப்ட் இழக்கலாம். இதனை, விண்டோஸ் ஸ்டோர், சர்ச் மற்றும் கேம்ஸ் வழியாக ஈடு செய்திட முடியும் என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரில் சத்ய நாதெள்ளா அறிவித்துள்ளார்.
எட்ஜ் பிரவுசர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேம்ஸ் வர்த்தகத்துடன் இணைந்திருக்கவில்லை. அதனுடைய அப்ளிகேஷன் ஸ்டோரிலும் இது இல்லை. ஆனால், எட்ஜ் பிரவுசர், மைக்ரோசாப்ட் தேடல் வர்த்தகத்திற்கு உரம் அளிக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing) தேடல் சாதனம், எட்ஜ் பிரவுசரின் மாறா நிலையில் உள்ள தேடல் சாதனமாக அமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்களும் அப்படியேதான் பயன்படுத்துவார்கள். நிச்சயம் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அதே நேரத்தில் கார்டனா செயலியின் செயல்பாடு, பிங் தேடல் சாதனத்தால் திறன் பெறும் வகையில் உள்ளது. எனவே, எட்ஜ் பயனாளர்கள், கார்டனா இணைப்பின் பலன்களை அனுபவிக்கையில், பிங் தேடல் சாதனத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.
கார்டனா செயலியை இரு வழிகளில் பெறலாம்: சர்ச் பாரில் நேரடியாக டைப் செய்தால் கார்டனா கிடைக்கும். அல்லது, இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் சொற்கோவையைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Ask Cortana" என்பதில் கிளிக் செய்திடலாம். இந்த இரண்டு வழிகளிலும், பயனாளர், பிங் தேடல் சாதனத்தினையே பயன்படுத்துமாறு தூண்டப்படுவார் என்பது உண்மை.
இந்த வகையில், பிங் தேடல் சாதனப் பயன்பாட்டின் மீது, மைக்ரோசாப்ட் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. விளம்பர வருமானம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், ஆண்டுக்கு ஆண்டு 21% உயர்ந்து வருகிறது. இது பிங் மூலம் இன்னும் அதிகரிக்கும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
எட்ஜ் பிரவுசரை பயனாளர்களிடம் பரிந்துரைத்து பயன்படுத்தச் செய்வது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமான இலக்கினை அடையும் வழிகளில் ஒன்றாகும். தேடல் சந்தையில் தன் பங்கினை உயர்த்திக் கொள்ள எட்ஜ் பிரவுசர் பயன்பாடு உதவும். அந்த கூடுதல் பயன்பாடு, கூகுள் நிறுவனப் பங்கினைக் குறைக்கலாம். குரோம் பயனாளர்கள், எட்ஜ் பிரவுசருக்குத் தாவினால், அவர்கள் நிச்சயமாக, பிங் தேடல் சாதனத்தினையே சார்ந்திருப்பார்கள். அது கூகுள் வருமானத்தை நிச்சயம் பாதிக்கும். எனவே, விண்டோஸ் 10 பயனாளர்கள், மைக்ரோசாப்ட் கொடுக்கும், மற்ற பிரவுசர் குறித்த எச்சரிக்கையினை, சிரமேல் கொண்டு கவனித்து நடப்பார்களா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X