பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2015
00:00

வாசகர் கடிதம் பகுதியில் ஒரு பேராசிரியர் கூறியிருப்பது போல, இந்தியாவில் இயங்கும் தொழில் நுட்பக் கழகங்கள் குறித்தும், அவற்றில் கல்வி பயில என்ன என்ன முன்னேற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், நம் கிராமப்புற மாணவர்களுக்கு நன்கு தெரியும் வகையில், எடுத்துரைத்து, இந்த கல்வி நிலையங்களில் இடம் பெற்று பயிலும் வாய்ப்புகளை அவர்கள் அடையும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான், இந்திய கிராமங்களிலிருந்து, உலகமே வியக்கும் வண்ணம், புதிய தொழில் நுட்பங்களை, ஆளுமையை நம் மாணவர்கள் வெளிப்படுத்துவார்கள்.
ஜே. பிரகாஷ் குமார், செய்யாறு.

கூகுள் நிறுவனம் தான் சேவையினைத் தொடங்கிய நாள் முதல், தொடர்ந்து ஏதேனும் புதிய சேவையினைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்ற வேட்கையுடன் பணியாற்றியது, உங்கள் கட்டுரையிலிருந்து தெரிய வருகிறது. ஏதோ வருமானம் வருகிறது என்று இல்லாமல், மக்களை டிஜிட்டல் வழிப் படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் கூகுள் நிச்சயம் நம் வரலாற்றில் இடம் பிடிக்கும்.
பேரா. எல். கதிரேசன், புதுச்சேரி.

கூகுள் தரும் பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே தரப்படுகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயமாக உள்ளது. எத்தனை பெரிய நிறுவனம் தன் செலவுகளை ஈடு கட்ட வழிகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்த அளவில் இலவச சேவைகளை வழங்குவது, அதன் சமுதாய நலம் விரும்பும் நோக்கத்தினைத் தெளிவாகக் காட்டுகிறது. இதன் திட்டங்களுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
என். ஸ்ரீலேகா ராஜன், பெங்களூரு.

கூகுள் தந்த 18 ஆண்டு சேவை என்று தகவல்கள் கூறும் கட்டுரையில், அதன் 15 ஆண்டு சேவை குறித்த படம் தந்திருக்கிறீர்கள். இருப்பினும், தங்களின் கட்டுரை தரும் தகவல்களை அந்தப் படம் அருமையாகவும், சுருக்கமாகவும் மனதில் பதியும் வகையிலும் தருகிறது. நன்றி.
கா. ஆராவமுதன், சிதம்பரம்.

விண்டோஸ் 7 இயக்கம் குறித்த குறிப்புகள் இன்னும் அதிகமாகத் தரவேண்டும் என விரும்புகிறேன். இன்னும் நம் வாசகர்களில் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 7 தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதனைத் தொடர்ந்து அதிகப்படுத்தித் தரவும்.
எஸ். சகாதேவன், செங்கல்பட்டு.

ஸ்டிக் கம்ப்யூட்டர்கள் இன்னும் குறைந்த விலையில் வரத் தொடங்கினால், மக்களிடையே கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கும். ஏனென்றால், தற்போது எச்.டி.எம்.ஐ. போர்ட் உள்ள மானிட்டர்களும், டிவிக்களும் அநேகமாக அனைத்து வீடுகளிலும் உள்ளன. எனவே, ஸ்டிக் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவது எளிதாகிவிடும். மேலும், வீட்டில் உள்ள பெண்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். நம் இஷ்டத்திற்கு நம் கம்ப்யூட்டரை எளிதாக எங்கும் கொண்டு செல்லவும் இது உதவும். இதனை அரசுக்கு அறிவிக்கும் வகையில் தாங்கள் தனியே ஒரு கட்டுரை எழுதவும்.
டாக்டர் கா. மூர்த்தி பெருமாள், மதுரை.

ஸ்டைலஸ் பயன்பாடு குறித்த அச்சம் தங்களின் கட்டுரையில் தரப்பட்டுள்ள தெளிவான குறிப்புகளைப் படித்த பின்னர் அகன்று விட்டது. இப்போது என் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில், ஸ்டைலஸ் பயன்படுத்துகிறேன். சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறேன்.
எஸ். ஷோபனா, சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X