ரூ.3,999ல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2015
00:00

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில், Micromax Canvas Spark 2 என்ற ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிட்டது. "இந்தியாவின் 3ஜி ஸ்மார்ட்போன்” எனத் தலைப்பிட்டு, இதனை மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ.3,999 மட்டுமே. கேன்வாஸ் வரிசையில் வந்திருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இது. இதன் திரை 5 அங்குல அளவில் 854 து 480 பிக்ஸெல் திறனுடன், ஊஙிஙஎஅ டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 768 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த ஸ்மார்ட்போனில் இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். பின்புறக் கேமரா, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்து, 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத், வை பி, ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1800ட்அட திறன் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்செட், சார்ஜர் ஆகியவற்றுடன் ஸ்கிரீன் பாதுகாப்பிற்கான அட்டையும் தரப்படுகிறது. ஸ்நாப் டீல் தளத்தில், இதன் விற்பனைக்கான முன்பதிவு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் வெளியான, கேன்வாஸ் ஸ்பார்க், மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்றதால், இரண்டாவது மாடல் போன் தற்போது வெளியிடப்படுகிறது. சென்ற இரு மாதங்களில், இந்த முதல் மாடல் விற்பனை 5 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, வினீத் தனுஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு தற்போது 12% ஆக உள்ளது. ரூ.3,000 முதல் ரூ. 4,000 விலையில் ஸ்மார்ட் போன்கள் வெளியிடப்படுவது, ஸ்மார்ட் போன் பயன்பாட்டினை இன்னும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X