பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் சலுகை குறைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. 01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது காட்டப்படும். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர், கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1500 ஐத் தொடர்பு கொண்டு அறியலாம். வேறு நெட்வொர்க் தொலைபேசிகளிலிருந்து தொடர்பு கொள்வோர் 18003451500 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
மஹாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலைச் சுற்றி, இலவச வை பி இணைய இணைப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தில், 3 நாட்கள், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள், இலவசமாக இணைய இணைப்பினை, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெற்றுப் பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு மேலாகவும், இணைய இணைப்பு தேவைப்படுவோர், அதற்கான கூப்பன்களை, கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தலாம்.
இதற்கிடையே, சென்னையில், பத்து தொலைபேசி நிலையங்கள் சார்ந்த தரைவழி தொலைபேசிகள், அடுத்த மேம்படுத்த நிலை வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுவிட்டன என்றும், இதன் மூலம், மிகச் சிறப்பான இணைப்பினை, இந்த தொலைபேசி சந்தாதாரர்கள் (55,204) பெறுவார்கள் என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. அடுத்தபடியாக, மேலும் 40 நிலையங்களில் இந்த மேம்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதன் மூலம் 1,75,000 சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
solomon - Trichy,இந்தியா
13-அக்-201512:35:05 IST Report Abuse
solomon இணைய வேகத்தை அக்டோபர் 1 முதல் 512 kbps லிருந்து 2 mbps ஆக அதிகரிகிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டனர். மீண்டும் அதே வேகத்திலேயே இயங்குகிறது. கஸ்டமர் கேர் ஐ அழைத்து கேட்டால் அது பொய் என்று அவர்களே சொல்கிறார்கள் .. என்ன கொடுமை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X