இன்ஸ்டாகிராம்: 40 கோடி பயனாளர்கள், 4000 கோடி படங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

ஆயிரம் சொற்கள் சொல்லக் கூடியதை, ஒரு படம் சொல்லிவிடும் என்று ஒரு கூற்று உண்டு. 4,000 கோடி படங்கள் இங்கே ஒரு சாதனையைப் பறை சாற்றுகின்றன. மொபைல் போன்களின் வழியே, படங்களைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள “இன்ஸ்டாகிராம்” பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற வாரத்தில் 40 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது. இதில் உள்ள படங்களின் எண்ணிக்கை 4,000 கோடி என்ற இலக்கைத் தொட்டு, தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. இந்த சாதனை இத்தளத்தின் நோக்கத்தினை மக்களிடையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. படங்கள் வழியாக நாம் நம் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில், இந்த தளம் அமைக்கப்பட்டது. இந்த சாதனை குறித்து, இன்ஸ்டாகிராம் இணைய தள வலைமனையில், http://blog.instagram.com/post/129662501137/150922-400million என்ற முகவரியில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமானது இந்த தளம். இதனை பேஸ்புக் 2012 ஆம் ஆண்டில், நூறு கோடி டாலர் கொடுத்து இதனை வாங்கியது. இந்த தளத்தைப் பயன்படுத்துவோரில், 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் வாழ்பவர்கள். இறுதியாக இணைந்த 10 கோடி பேரில், பாதிப்பேர், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர் அல்லாத பல பிரபலங்கள், இந்த தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று, மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள வலைமனைச் செய்தியில் தரப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தொடங்கப்படுகையில், 40 கோடி பயனாளர்கள் என்பது ஒரு கனவாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து இந்த செயலி மேம்படுத்தப்பட்டதால், இந்த அளவிற்குப் பயனாளர்களை அடைய முடிந்தது. இந்த உலகை படங்களில் பார்த்து ரசித்து, அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது என்பது ஒரு தனி அனுபவம் தான். இதனை எண்ணிப் பார்த்து, வடிவமைத்து, மக்களுக்காக அர்ப்பணித்து, தொடர்ந்து சேவை செய்து வரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X