சந்தைக்குப் புதிது ப்ளாஷ் ட்ரைவில் ஒரு சர்வர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

ப்ளாஷ் ட்ரைவ்களைத் தயாரித்து வழங்குவதில் முன்னணியில் உள்ள SanDisk நிறுவனம், அண்மையில், முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் இயங்கும், வித்தியாசமான பயன்பாட்டினைத் தரும் ப்ளாஷ் ட்ரைவ் ஸ்டிக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் SanDisk Connect Wireless Stick.
ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து பைல்களைக் காப்பி செய்து எடுத்துச் செல்லலாம். அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அதிலிருந்தும் பைல்களைக் காப்பி செய்து கொள்ளலாம். பைல்களை சேமித்து வைக்கும் சாதனமாகவும், எடுத்துச் செல்லப் பயன்படும் சாதனமாகவும் ப்ளாஷ் ட்ரைவ் பயன்படுகிறது.
தற்போது அறிமுகமாகி உள்ள SanDisk Connect Wireless Stick ஒரு வை பி சர்வராகவும் செயல்படுகிறது. இதில் காப்பி செய்யப்பட்ட பைல்களை, இது தரும் வை பி இணைப்பு மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இதன் உள்ளிருக்கும் பேட்டரி, இதனை நான்கு மணி 30 நிமிட நேரம் செயல்பட வைக்கிறது. இதில் உள்ள அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட வை பி இணைப்பு இதில் தரப்படுகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்: வயர் இணைப்பு இன்றி, வை பி இணைப்பு மூலம், நம் போட்டோ, விடியோ மற்றும் டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்து, தேவைப்படுகையில், அதே முறையில் அணுகிப் பெற்றுப் பயன்படுத்துதல்.
ஒரே நேரத்தில், ஹை டெபனிஷன் விடியோ பைல்களை, மூன்று சாதனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி. வயர் இணைப்பு இன்றிப் பயன்படுத்துவதுடன், யு.எஸ்.பி. போர்ட் ஒன்றில் இணைத்தும் வழக்கமாகப் பயன்படுத்துவதுபோலப் பயன்படுத்தலாம்.
16, 32, 64 மற்றும் 128 ஜி.பி. கொள்ளளவுகளில் இது கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2,790, ரூ. 3,790, ரூ. 5,490 மற்றும் ரூ. 9,490 ஆகும்.
இதனுள் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதனை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். நம் வாழ்க்கை முறை மொபைல் சாதனப் பயன்பாட்டினைப் போல எப்போதும் நகர்ந்து கொண்டே ஓடிக் கொண்டே இருப்பதாக மாறிவிட்டது. அதற்கேற்ப இது போன்ற சாதனங்கள் நமக்குத் தேவையாய் உள்ளன. இது நிச்சயம் டிஜிட்டல் சந்தையில், நல்ல வரவேற்பினைப் பெறும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X