சிம் கட்டணமின்றி மொபைல் போனைப் பயன்படுத்த
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

இன்றைய காலத்தில், மொபைல் போன் ஒன்றைத் தங்கள் இடுப்பிலோ, பாக்கெட்டிலோ, கைப் பைகளிலோ எடுத்துச் செல்லாத ஒருவரை, அவர் ஆணோ, பெண்ணோ, காண்பது அரிது. வங்கிக் கணக்கு அல்லது எந்த அரசு அல்லது பொதுத் துறை நிறுவனமாயினும், நம் தனிநபர் தகவல்களாகக் கேட்டு வாங்குவதில் கட்டாயமாக நம் மொபைல் சேவை எண்ணும் ஒன்றாகும். இதனால், பலர், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் வாங்கி வைத்துள்ளனர். ஏதேனும் ஒரு நிலையில், பயன்படுத்தி வரும் மொபைல் போன் செயல் இழந்து போனால், உடனடியாகக் கை கொடுக்க ஒரு மொபைல் போன் வேண்டும் என்ற திட்டப் பாங்கில், குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மொபைல் போன்களை, உதிரியாக வைத்துள்ளனர்.
அப்படியானால், அந்த உதிரியாக வைத்திருக்கும் மொபைல் போன்களை எந்தப் பயனும் இல்லாமலா வைத்திருக்கிறார்கள்? என்ற வினா எழும். வீணாக, எந்த பிரயோஜனமும் இன்றி, ஏன் வைத்திருக்க வேண்டும் என்று கூட எண்ணலாம். இல்லை. சிலர் இதனை மிகச் சாதுர்யமாக, மொபைல் சேவை இன்றி, மொபைல் கட்டணத் திட்டம் எதுவும் இல்லாமல், ஏறத்தாழ மொபைல் சேவை பெற்ற போன் போலவே பயன்படுத்தி வருகின்றனர். இது எப்படி இயலும்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? சிம் இல்லாத ஒரு ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோன் அருகே வை பி இணைய இணைப்பு கிடைக்கும் சாத்தியம் இருந்தால், அதனை சிம் உள்ள ஒரு போன் போலவே பயன்படுத்தி பல வசதிகளைப் பெறலாம். அப்படிப்பட்ட, கட்டணமே இல்லாமல் போனைப் பயன்படுத்தக் கூடிய வசதிகளை இங்கு காணலாம்.
வாட்ஸ் அப் : Kik மற்றும் WhatsApp அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், நம் மொபைல் போன்களின் செலவு குறைய ஆரம்பித்துவிட்டது என்று கூறலாம். பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் நிறுவனத்தை 120 கோடி டாலர் கொடுத்து வாங்கியபோது, அனைவரும் அதிர்ந்தனர். ஆனால், தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியில் ஏற்பட்ட மேம்பாடுகள் அவர்களை பிரம்மிக்க வைத்து, அதனைப் பின் தொடர வைத்தன. இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 90 கொடியை எட்டியது. தங்கள் நண்பர்களுடன், எந்தவிதக் கட்டணமும் இன்றிப் பேசும் வாய்ப்பினை, வாட்ஸ் அப் தந்ததுவும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
வழக்கமான டெக்ஸ்ட் மெசேஜ் என்றில்லாமல், குழுவாக அமைந்து அனைத்து உறுப்பினர்களுக்குள்ளாகத் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி அனைவரையும் கவர்ந்தது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, உணர்ச்சிகளை வெளிக்காட்டும் எமோட்டிகான்கள் என்னும் சிறிய சித்திரங்கள், படங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தக் கூடியதாக, இது உயர்ந்த போது, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தி வரத் தொடங்கினார்கள். இதனைப் பயன்படுத்த உங்கள் மொபைல் போனில் சிம் மற்றும் சார்ந்த எந்த சேவையும் தேவை இல்லை. சிம் ஒன்றின் எண் மட்டும் இருந்தால் போதும். ஆண்ட்ராய்ட் அல்லது ஐ.ஓ.எஸ். என எந்தவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும் செயலியாக இது உள்ளது. ஆப்பிள் போன் உள்ளவர்கள் https://itunes.apple.com/us/app/whatsapp-messenger/id310633997?mt=8 என்ற முகவரியிலும், ஆண்ட்ராய்ட் போன் உள்ளவர்கள் https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en என்ற முகவரியிலும், இந்த வாட்ஸ் அப் செயலியைப் பெறலாம். இதனை இன்ஸ்டால் செய்கையில், உங்களுடைய மொபைல் எண் கேட்கப்படும். அதனைத் தந்துவிட்டால் மட்டும் போதும். அதற்கான சிம் உங்கள் போனில் இருக்க வேண்டும் என்பது இல்லை. இணையத் தொடர்பு வை பி வழியாகக் கிடைக்கையில், இதனை இயக்கிப் பயன்படுத்தலாம். பேசலாம்; டெக்ஸ்ட் அனுப்பலாம். அனைத்தையும் எளிமையாகவும், விரைவாகவும் பயன்படுத்த வல்லது என்பது இதன் திறனுக்கு எடுத்துக் காட்டு.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்கையில், மொபைல் சேவை நிறுவனங்கள் கேட்கும் ரோமிங் கட்டணம் மிக மிக அதிகமாக இருக்கும். அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். கட்டணமும் மிக அதிகம். அது போன்ற இடங்களில், வாட்ஸ் அப் நமக்குத் துணை நிற்கும். வெளிநாடுகளில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விடுதிகள், கடைகள் என மக்கள் கூடும் இடங்களில், இலவச இணைய இணைப்பு கிடைப்பது இதற்கு உதவியாக இருக்கும்.
இங்கும் நாம் வை பி இணைய இணைப்பு இருந்தால், மொபைல் போன் கட்டண வசதியைப் பயன்படுத்தாமல், வை பி இணைப்பில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தலாம்.
ஸ்கைப்: உங்களுடைய மொபைல் போனில், ஸ்கைப் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும். உடனே, வை பி இணைப்பில் சென்று, மெசேஜ் அனுப்பலாம். போன் அழைப்பினை ஏற்படுத்திப் பேசலாம்; அல்லது விடியோ வழி அரட்டை அடிக்கலாம். எந்த சிம் பயன்பாடும் தேவை இல்லை. அதே போல, உங்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள ஒருவர் விரும்பினால், இந்த செயலி மூலம் உங்களைப் பிடித்துத் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், அவர்களிடமும், ஸ்கைப் அக்கவுண்ட் மற்றும் இணைய இணைப்பு இருப்பது அவசியம். இதனுடைய சிறப்பே, இது, எந்த விதக் கட்டணத் திட்டம், சிம் இன்றி செயல்படுவதுதான். இது வாட்ஸ் அப் செயலியில் தொடர்பு கொள்வதைக் காட்டிலும் கூடுதல் வசதி அளிக்கிறது. குழுவாகவும் பேசிக் கொள்ளலாம். ஒரு சில நாடுகளில், இதன் மூலம் அழைப்பு விடுப்பது கட்டணம் இல்லாமல் உள்ளது. வேறு சில நாடுகளில், சிறிதளவு கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அமெரிக்காவிலும், கனடாவிலும், இது இலவசம். இந்தியாவில் போன் அழைப்பிற்குக் கட்டணம். விடியோ அழைப்பிற்கு எதுவும் இல்லை. ஆப்பிள் போன்களில் உள்ள ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்கைப் செயலி பெற https://itunes.apple.com/us/app/skype-for-iphone/id304878510?mt=8 என்ற இணைய முகவரியில் உள்ள தளம் செல்லவும். ஆண்ட்ராய்ட் போனுக்கு, https://play.google.com/store/apps/details?id=com.skype.raider&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X