இந்தியாவில் மூன்று மாதங்களில் 12 லட்சம் ஐபோன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

விலை அடிப்படையில் இயங்கும் இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை அதிகமாக இருந்ததில்லை. ஆனால், தற்போது, தன் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை, இந்தியாவில் ஆப்பிள் எடுத்து வருகிறது. அந்த வகையில், நடப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், 12 லட்சம் ஐபோன்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது சென்ற ஆண்டு மொத்தமும் மேற்கொண்ட விற்பனைக்குச் சமமாகும்.
இந்த ஆண்டில், 500 ஐ.ஓ.எஸ். ஸ்டோர்களை இரண்டாம் நிலை நகரங்களில் ஆப்பிள் திறக்கிறது. கோயம்புத்தூர், திருச்சி ஆகியவை இதில் அடங்கும். பெரிய நகரங்களில், 2000 ச.அடி பரப்பளவில் தன் விற்பனை மையங்களை அமைத்த ஆப்பிள் நிறுவனம், இந்த சிறிய நகரங்களில், 300 முதல் 600 ச.அடி பரப்பில் கடைகளை அமைக்க முடிவெடுத்து செயல்பாட்டில் இறங்கியுள்ளது.
இந்த விற்பனை முயற்சிகளை மேற்கொள்ள, ரூ. 300 கோடி செலவில் திட்டத்தினை வரையறை செய்துள்ளது. சென்ற ஆண்டில், விற்பனக்கென மேற்கொள்ளப்பட்ட செலவினங்களின் மொத்த மதிப்பு ரூ. 112 கோடி. நடப்பு ஆண்டில், 35 லட்சம் போன்களை விற்பனை செய்திட ஆப்பிள் முயற்சிக்கிறது.
வரும் அக்டோபர் 16ல், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய போன்களான ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாகின்றன. இவற்றின் விலை ரூ.60,000ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விற்பனை விலை விற்பனைக்கு வரும்போது அறிவிக்கப்படும். பண்டிகை கால மோகம் மற்றும் ஆப்பிள் சாதனங்களை விரும்பும் மக்களின் ஆர்வம் ஆகியவை இந்த முறை, ஆப்பிள் போன் விற்பனைக்குக் கை கொடுக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X