மைக்ரோசாப்ட்: இன்றைய தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 அக்
2015
00:00

மைக்ரோசாப்ட் தன் செயலிகள் எத்தனை வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்களத் தன்னுடைய “Microsoft by Numbers” என்ற இணையதளத்தின் (http://news.microsoft.com/bythenumbers/windows-ten) மூலம் தொடர்ந்து காட்டிக் கொண்டேயிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில், நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் இருக்கும் என்ற இலக்கினை மைக்ரோசாப்ட் அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த குறிப்பிட்டுள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைக் காலத்திய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
1. விண்டோஸ் ஸ்டோரில் 6 லட்சத்து 69 ஆயிரம் அப்ளிகேஷன்கள், போன்கள், டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்காக உள்ளன. ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் அப்ளிகேஷன்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை, சென்ற நவம்பரில், 5 லட்சத்து 25 ஆயிரமாக இருந்தது.
2. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பினை நூற்று இருபது கோடி பேர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இது பூமியில் வசிப்பவர்களில் ஏழில் ஒருவர் என்ற கணக்காகிறது. ஆபீஸ் செயலி, இதுவரை, 15 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட் சாதனங்களை உள்ளடக்கியதாகும். கூகுள் பிளே வழியாக, வேர்ட் செயலி, 5 கோடி முறை இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் செயலிகள், தலா ஒரு கோடி முறை இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள், 140 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
3. அவுட்லுக் செயலியை, 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை அவ்வளவாக உயரவில்லை.
4. அடுத்து குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது ஸ்கைப் செயலியின் பயன்பாடு. ஒவ்வொரு நாளும், ஸ்கைப் பயனாளர்கள், 300 கோடி நிமிடம் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற ஆண்டு, இது ஒவ்வொரு மாதமும் 5,000 கோடி நிமிடங்களாக இருந்தது.
5. பன்னாட்டளவில் இயங்கும் முதல் 500 நிறுவனங்களில், 80% நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் வழங்கும் க்ளவ்ட் சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.
6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூகக் கடமை குறித்தும் இந்த தளத்தில் தகவல்கள் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒவ்வொரு நாளும், 26 லட்சம் டாலர் மதிப்பிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களை, இலவசமாக, 86 ஆயிரம் சேவை நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள், நூறு கோடி டாலர்களுக்கு மேலாக, 31 ஆயிரம் தர்ம நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர்.
7. இந்நிறுவனத்தின் பைபர் நெட்வொர்க் வலைப்பின்னலின் நீளம், நிலாவிற்கும் பூமிக்குமாய் அளந்திட்டால், மொத்த தூரத்தைப் போல மூன்று மடங்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
8. இறுதியாக வேடிக்கையான ஒரு தகவலும் தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகமான ரெட்மாண்ட் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது French fries எனப்படும் வறுவலே. இதைச் சாப்பிடக் கேட்டு, ஆண்டு தோறும் பத்து லட்சம் ஆர்டர்கள் தரப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X