தினந்தோறும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 அக்
2015
00:00

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர், தினந்தோறும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளைப் பயன்படுத்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Connected Life என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்களில், 56% பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். 51% பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.
பேஸ்புக் பயன்படுத்துவதில், இந்தியா இரண்டாவது பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 12. 5 கோடி பேர் தற்போது இந்த சமுதாய வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
உடனடி செய்தி அனுப்பப் பயன்படுத்தும் செயலிகளில், வாட்ஸ் அப் 56% பேரால் பயன்படுத்தப்படுகிறது. பேஸ்புக் தளத்தினை 51% பேர் பயன்படுத்துகின்றனர். சென்ற, செப்டம்பர் மாதத்தில், பன்னாட்டளவில், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலிக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 90 கோடி ஆக இருந்தது. இதில், இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எப்போது டெக்ஸ்ட் அமைத்து செயல்படுத்துவதில், அதிக செயல்பாடு உள்ள சந்தையாக உள்ளது. இந்த உணர்வும், ஒரே மாதிரி எண்ணம் உள்ளவர்களிடையே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆர்வமும், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பும் செயலிகளைப் பரவலாகப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துள்ளன என்று இந்த ஆய்வினை மேற்கொண்ட TNS India என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன், வேகமாக வளர்ந்து வரும் மொபைல் போன் பயன்பாடும், தினந்தோறும் பரிமாறிக் கொள்ளப்படும் மெசேஜ்களின் எண்ணிக்கையை உலக அளவில் முதல் இடத்தைப் பெறுவதில் ஊக்குவித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆய்வில் சந்தித்த நபர்களின் எண்ணிக்கை 5,306 பேர். இந்த ஆய்வு பன்னாட்டளவில், 50 நாடுகளில், 60,500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. பன்னாட்டளவில், மெசேஜ் அனுப்பும் செயலிகளாக, வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும்
வி சேட் ஆகியவை உள்ளன. வி சேட், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள Tencent Holdings என்னும் நிறுவனத்தின் செயலியாகும். பன்னாட்டளவில், இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலிகள் பயன்பாடு, ஆண்டுதோறும் 12% வளர்ந்து வருகிறது. இதில் பங்கெடுப்பவர்களின் வயது 16 முதல் 65 ஆகும்.
தினந்தோறும் மெசேஜ் செயலிகளைப் பயன்படுத்துபவர்கள், ஆசிய பசிபிக் நாடுகளில் தான் அதிகமாக உள்ளனர். மலேசியாவில் 77%, ஹாங்காங் 73%, சீனா 69% மற்றும் இந்தியாவில் 38%. இதற்கு நேர் மாறாக, மேற்கு நாடுகளில், இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. உலக அளவில் இவற்றைப் பயன்படுத்துவோரில், கிரேட் பிரிட்டனில் 39% மற்றும் அமெரிக்காவில் 35% பேரே உள்ளனர்.
Snapchat, WeChat, Line and WhatsApp போன்ற இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலிகள், புதிய வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன. Facebook மற்றும் Twitter செயலிகளைப் பயன்படுத்துவதைப் புதிய பயனாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலிகள் பயன்படுத்துபவர்கள், இவற்றினால், தங்களைப் பற்றிய மற்றவரின் கணிப்பு, எப்படி உருப்பெறுகிறது என்பதனை அறிந்து கவனமாகவே, இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பேஸ்புக் தான், சமூக வலைத்தள மையமாக இருந்து வருகிறது. பேஸ்புக் மெசஞ்சர் செயலியை உடனடி தகவல் அனுப்பப் பயன்படுத்தவே பலரும் விரும்புகின்றனர். இருப்பினும், வாட்ஸ் அப் தான், இன்ஸ்டண்ட் மெசேஜுக்காக அதிகம் விரும்பப்படும் செயலியாக உள்ளது.
பன்னாட்டளவில், இணையம் பயன்படுத்துபவர்களில், 30% பேர், பேஸ்புக் தளத்தினைத் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில், பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவோர் சென்ற டிசம்பர் மாதம் 11.8 கோடியாக இருந்தனர். இது ஜூன் மாதத்தில், 13.2 கோடியாக உயர்ந்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X