டிஜிட்டல் இந்தியா ஆதரவு பேஸ்புக் இன்டர்நெட் இணைப்பில் இணையுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 அக்
2015
00:00

அனைவருக்கும் இலவச இணைய இணைப்பு தரும் திட்டத்தினை, இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில், பேஸ்புக் அமல்படுத்தி வருகிறது. அண்மையில், பேஸ்புக் அலுவலகத்திற்கு பிரதமர் சென்ற போது, இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில், தங்கள் படங்களை இணைத்துக் கொள்ளும் டூலை பேஸ்புக் தளம் தந்தது. இந்த வண்ணத்தில் படங்களை வெளியிட்டு, பேஸ்புக், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான ஆதரவினைத் தெரிவிப்பதாக பேஸ்புக் அறிவித்தது.
அதே நேரத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதற்கும், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வரும், சர்ச்சைக்குள்ளான, இலவச இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேஸ்புக் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது போல வண்ணத்தில் தங்கள் படங்களைப் போடும் மக்கள், இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்து பரவலாக வெளியானதால், பேஸ்புக் இந்நிலையைத் தெளிவு படுத்தியுள்ளது.
தற்போது பேஸ்புக் வழங்கி வரும் இலவச இணைய திட்டத்தில், 8 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். ஆனால், இது ஒரு சாரார் நிலை சார்ந்ததாக இருப்பதாக, நெட் நியூட்ராலிட்டி என்னும், ”அனைவருக்கும் சமமான இணையம் வேண்டும்” என்பதை வலியுறுத்துவோர் குற்றம் சாட்டி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனர் இந்த போக்கினைக் குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி” குறித்து 'சரியான திசை' காட்டப்பட்டு, அந்தப் போக்கில், இது குறித்த விவாதம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பயனாளர்களுக்கான சமமான இணையத்தை, கட்டுப்படுத்தும் அமைப்புகள் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு, அதே நேரத்தில், இணைய இணைப்பினை வழங்குவதில், நிறுவனங்கள் புதிய திட்டங்களை மேற்கொள்ளவும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தன்னுடைய பேஸ்புக் தலைமையகமான மென்லோ பார்க் வளாகத்தில், இந்தியப் பிரதமரை வரவேற்றுப் பேசிய, நிறுவனத் தலைவர் மார்க் பல தகவல்களை வெளியிட்டார். இந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், 50%க்கும் மேற்பட்டோர், பேஸ்புக்கினைப் பயன்படுத்துகின்றனர். இந்த 13.2 கோடிப் பேரில், 90% பேர், பேஸ்புக் தளத்தினைத் தங்கள் மொபைல் போன்கள் வழி அணுகுகின்றனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர இந்திய வர்த்தக நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கான பேஸ்புக் பக்கங்களை அமைத்து இயக்கி வருகின்றனர். இந்தப் போக்கு, ஆண்டு தோறும் 70% உயர்ந்து வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X