கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 அக்
2015
00:00

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைத் தயாரித்த பின்னர், சில நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தால், அவற்றின் மொத்த மதிப்பு டாஸ்க் பாரில் காட்டப்படுகிறது. ஆனால், அலுவலகத்தில் உள்ள டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் அது காட்டப்படவில்லை. இதனைப் பெற என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்? அல்லது இன்ஸ்டலேஷனில் பிழை ஏற்பட்டுள்ளதா?
என். சிவசங்கரன், திருத்துறைப் பூண்டி.
பதில்:
இது ஒரு சாதாரண மாறா நிலையில் உள்ள வசதி தான். ஸ்டேட்டஸ் பாரில், எக்ஸெல் எவற்றை எல்லாம் காட்ட வேண்டும் என்பதனை நாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். நீங்கள் எதிர்பார்க்கும் எண்களின் கூட்டல் மதிப்பு மட்டுமின்றி வேறு சில மதிப்புகளையும் பெறலாம். இதற்கு, ஸ்டேட்டஸ் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனு தரும் பட்டியலைக் கவனிக்கவும். இதில் Average, Count, Sum போன்ற இன்னும் சில மதிப்புகளின் பெயர்கள் காட்டப்படும். இவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றை, அல்லது எவை எல்லாம் காட்டப்பட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கூட்டுத் தொகை காட்டப்பட Sum என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில், வேறு சொற்களை அமைத்திட Find and Replace வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சொல்லைத் தேடி, அந்த இடத்தில் இன்னொரு சொல்லை அமைக்கும்படி இதனைப் பயன்படுத்துகையில், சொல் தேடி இடம் காட்டுகிறது. அதில் Replace செய்திட எண்டர் தட்டியவுடன், அடுத்து அந்த சொல் இருக்குமிடம் கர்சர் சென்று நிற்கிறது. முந்தைய சொல் இருந்த இடத்தில், நாம் அமைத்த சொல் அமைக்கப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை. இதனை அறிந்து கொள்ள Find and Replace கட்டத்தில் எந்த இடத்தில் செட் செய்திட வேண்டும்?
ஜே. என். ஜீனத், சேலம்.
பதில்:
அருமையான சிக்கலை தெரிவித்துள்ளீர்கள். இதுவரை, சொல் மாற்றப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையிலேயே நாம் செயல்பட்டு வந்திருக்கிறோம். முந்தைய சொல்லை வேர்ட் மாற்றிவிட்டதா என அறிய, Find and Replace
கட்டத்தில் வசதி இல்லை. ஆனால், இதற்குச் சற்று சுற்று வழியில் செயல்பட்டு, நம் சந்தேகத்தை உறுதி செய்து கொள்ளலாம். நாமே சொல் உள்ள இடத்தில், புதிய சொல்லை அமைக்கலாம்.
1. ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடவும்.
2. பின்னர், கண்ட்ரோல் + எப் கீகளை அழுத்தி, நாம் தேடும் சொல்லுக்கு இணையாக சொல் உள்ள இடத்தைக் கண்டறியவும். இப்போது எஸ்கேப் கீயை அழுத்தினால், பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸ் மூடப்படும். இருப்பினும், நாம் தேடி அறியப்பட வேண்டிய சொல்லில், கர்சர் நிற்கும்.
3. இப்போது கண்ட்ரோல்+ வி கீகளை அழுத்தினால், கிளிப் போர்டில் உள்ள ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும்.
4. அடுத்து Object Browser இல், நெக்ஸ்ட் அம்புக்குறி அல்லது கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், தேடும் சொல் இருக்கும் இட த்தில் கர்சர் நிற்கும். இனி மேலே 2 மற்றும் 3ல் காட்டப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளவும்.

கேள்வி: “அநாதை பைல்” (Orphan File) என்று எதனைக் கூறுகிறார்கள்? அப்படி எப்படி ஒரு பைல் ஏற்பட முடியும்? அன்பு கூர்ந்து விளக்கம் தர வேண்டுகிறேன்.
என். மொஹைதீன், பொள்ளாச்சி.
பதில்
: நல்ல கேள்வி. பைல் என்று ஒன்று இருந்தால், அதனைத் திறக்க ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் வேண்டும். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் பைல் என்றால், அதனைத் திறக்க வேர்ட் அல்லது அதைப் போன்ற ஒரு புரோகிராம் வேண்டும். நீங்கள் அந்த புரோகிராமினை நீக்கிவிட்டால், குறிப்பிட்ட பைலைத் திறக்க முடியாதே. பேஜ் மேக்கர் புரோகிராமினை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கிவிட்டால், பின்னர் அதில் உருவான பேஜ் மேக்கர் பைல்கள் அனைத்தும் அந்த கம்ப்யூட்டரில் அநாதை பைல்களே. பைல் ஒன்றைத் திறக்கக் கூடிய அதன் புரோகிராம் இல்லாத போது, அந்த பைல் ஒரு அநாதை பைல் தான்.

கேள்வி: என் நண்பர் எனக்கு அனுப்பும் வேர்ட் பைல்களின் பின்னணியில், கண்களை உறுத்தாத எளிமையான வண்ணம் உள்ளது. எப்படி பக்கம் முழுவதும் வண்ணப் பின்னணியை ஏற்படுத்த முடியும்?
கா. நிறைமதி, சென்னை.
பதில்:
வேர்ட் புரோகிராமில், அதில் ஏற்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு, பின்னணியில் நிறம் அமைத்திடும் வழிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இணைய தளங்களில் டாகுமெண்ட்களைப் பக்கங்களாக அமைப்பவர்கள் இந்த பின்புல வண்ணப் பின்னணியைப் பயன்படுத்துவார்கள். வேர்டில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி, கண்களுக்கு உறுத்தாத வகையில், மென்மையான வண்ணத்தைக் கொடுப்பது உங்கள் கற்பனைத் திறனில் தான் உள்ளது. பின்புல வண்ணம் அமைக்கும் வழிகளைக் கீழே தருகிறேன்.
1. ரிப்பனில் பேஜ் லே அவுட் டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
2. இங்கு Page Background குரூப்பில், Page Color என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் வண்ணங்கள் நிறைந்த ஒரு கட்டத்தை உங்களுக்குக் காட்டும். இதிலேயே, கூடுதல் வண்ணங்கள் பெறவும் வழிகள் இருக்கும்.
3. உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வண்ணம், டாகுமெண்ட்டிற்கு பின்புல வண்ணமாக, படிப்பதற்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும். நீங்கள் மவுஸ் கர்சரை வண்ணங்களுக்கான கட்டங்களில் செல்லும்போதே, டாகுமெண்ட் பின்புறம் இந்த வண்ணங்கள் அமைக்கப்பட்டுக் காட்டப்படும். சரியானது என நீங்கள் முடிவு செய்தால், அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வண்ணத்தினை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், மேலே காட்டியுள்ளபடி சென்று “No color” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கேள்வி: நான் அமைக்கும் வேர்ட் டாகுமெண்ட்களில், ஆடியோ பைல்களை, வரிகளுக்கிடையே இணைக்க முடியுமா? அதாவது, டாகுமெண்ட்டைப் படிப்பவர்கள், அதனை தாங்களாகவே இயக்கி அதனைக் கேட்க வேண்டும். பின்னர், டெக்ஸ்ட் படிப்பதைத் தொடர வேண்டும். இது முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
என். சாருகேசி, சிவகாசி.
பதில்:
உங்கள் டாகுமெண்ட்டிற்கு மல்டி மீடியா டச் கொடுக்க விரும்புகிறீர்கள். நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் வேர்ட் புரோகிராமில் உள்ளன. கீழே கண்டுள்ளபடி செயல்படவும்.
1. டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் ஆடியோ பைல் இணைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில், கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டெக்ஸ்ட் குரூப்பில் Object என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. பைல் டேப்பில் Create என்பதில் கிளிக் செய்திடவும்.
5. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், நீங்கள் இணைக்க விரும்பும் ஆடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகேஎ கிளிக் செய்தால், டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில், கர்சர் வைத்த இடத்தில், ஆடியோ பைல் இணைக்கப்படும். அந்த இடத்தில், ஸ்பீக்கர் போல ஒரு ஐகான் காட்டப்படும். இந்த ஐகானில், டபுள் கிளிக் செய்தால், ஆடியோ பைல் இயக்கப்படும்.

கேள்வி: என்னிடம் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் டேப்ளட் பி.சி. ஒன்றுள்ளது. லெனோவா நிறுவனத்தின் தயாரிப்பு. இதற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து தங்களின் அறிவுரை தேவை.
எஸ். நீரஜா செல்வன், கோவை.
பதில்:
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்கான பாதுகாப்பு குறித்து பல வாசகர்கள் கவலைப்படத் தொடங்கிவிட்டனர். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயக்குவதற்கான அப்ளிகேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இங்கு தரப்படும் பத்து லட்சத்திற்கும் மேலான அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் எந்தவிதமான மால்வேர் புரோகிராம்களும் இல்லை என்று அறிந்த பின்னரே, அத்தளத்தில் பதியப்பட்டு, பயனாளர்கள் தரவிறக்கம் செய்திட அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும் சில புரோகிராம்களில், பிரச்னைகளைத் தரும் மால்வேர்கள் இருப்பதாகப் பயனாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியே, நிதிப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அதிகரித்து வருவதால், ஹேக்கர்கள், இவற்றையும் தங்கள் இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டனர்.
எனவே, இவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் வகையில், கூகுள் பிளே ஸ்டோரில் என்ன வகையான பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து தேடுகையில், இலவச சேவை வழங்கும் AVG, AVAST and McAfee போன்றவையே இங்கும் தென்படுகின்றன. Norton போன்றவையும் கிடைக்கின்றன. ஆனால், அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு 30 டாலர்கள் வரை செலுத்த வேண்டியதிருக்கும்.
இந்த புரோகிராம்கள் அனைத்தும், உங்கள் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் பதியப்பட்டுள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் மெமரி கார்ட்களில் உள்ள புரோகிராம்கள், பைல்கள் என அனைத்தையும் ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பாக உள்ளனவா என்று காட்டும். தொடர்ந்து போனுக்கு வரும் டெக்ஸ்ட் மெசேஜ்களை ஸ்கேன் செய்து அனுப்பும். திருட்டுக்கு எதிராகச் செயல்படும் வசதியும் இவற்றில் உண்டு. உங்கள் போன் திருடப்பட்டால், அது இருக்கும் இடத்தை இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் காட்டும். குறிப்பாக, ஏ.வி.ஜி. புரோகிராம், போனில் யாரேனும் தவறான பாஸ்வேர்டினை அமைக்க முயன்றால், அவரைப் படமெடுத்து அனுப்பும்.
இவை குறித்து இணையத்தில் கிடைக்கும் திறனாய்வுகளைப் படித்து, உங்களுக்குத் தேவையானதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளவும்.

கேள்வி: புதியதாக நான் வாங்கிய லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8.1 பயன்படுத்தி வருகிறேன். இதில் ஸ்டார்ட் மெனு இல்லாததால், சிஸ்டம்
ஷட் டவுண் செய்வது எப்போதும் குழப்பமாகவே உள்ளது. பவர் ஸ்விட்ச் ஆப் செய்து ஷட் டவுண் செய்திடும் வழியைப் பின்பற்றுகிறேன். அது சரியா? சரியான வழி வேறு இருந்தால் கூறவும். நன்றி.
கா. சுப்ரமணிய ராஜ், திருப்பதி.
பதில்
: பவர் ஸ்விட்ச் பயன்படுத்த வேண்டியதில்லை. சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.
நீங்கள் டெஸ்க்டாப் திரையில் இருந்தால், ஆல்ட் + எப் 4 கீகளை ஒரு சேர அழுத்தினால், ஷட் டவுண் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இங்கு Switch user, Sign out, Sleep, Shut down, மற்றும் Restart என்ற ஆப்ஷன்களைப் பார்க்கலாம். இங்கேயும், Shut down என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, சிஸ்டத்தை முழுமையாக மூடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X