சோனி எக்ஸ்பீரியா இஸட் 5
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 நவ
2015
00:00

நுகர்வோர் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான சாதனங்களுக்கான, பெர்லின் நகரில் நடைபெற்ற 2015 ஆண்டு கண்காட்சியில், சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் 5 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. சென்ற வாரம், இதனை இந்தியாவில், அதிகபட்ச விலை ரூ. 52,990 எனக் குறியிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதில் திரை 5.2 அங்குல அளவில் Triluminos டிஸ்பிளேயுடன் உள்ளது. 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தி கொண்டுள்ளது. குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் 810 ப்ராசசர் இதில் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை 200 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்த முடியும். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் லாலிபாப் பதிகை 5.1.
இதன் பின்புறக் கேமரா Exmos RS சென்சாருடன் 23 எம்.பி. திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள ஜி லென்ஸ் மூலம் 4 கே விடியோ பதிவினை மேற்கொள்ளலாம். தூசு மற்றும் நீர் புகாத தன்மைக்குச் சான்றிதழ் பெற்றுள்ளது. இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். விரல் ரேகை சென்சார் இதில் சிறப்பாக இயங்குகிறது. சோனி நிறுவனத்தின் DSEE HX ஆடியோ தொழில் நுட்பம் இதில் செயல்படுகிறது. RDS இணைந்த எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் பரிமாணம் 146 x 72 x 7.3 மிமீ. எடை 154 கிராம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,900 mAh திறன் கொண்டது. இந்த போன் கருப்பு, தங்க வண்ணம் மற்றும் பச்சை நிறங்களில் வந்துள்ளது. இந்தியாவில் இது இலவசமாக, ரூ. 3,500 மதிப்புள்ள கவருடன் விற்பனை செய்யப்படுகிறது. வேறு சில அப்ளிகேஷன்களும் சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X