சர்பேஸ் புக் எதிர் கொள்ளும் மேக்புக் ப்ரோ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தொடர்ந்து தங்கள் சாதனங்கள் மூலமும், சாப்ட்வேர் மூலமும் மோதிக் கொண்டுதான் இருக்கின்றன. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான போது, ஆப்பிள் நிறுவனமே இந்த போட்டியில் வென்றதாகத் தெரிந்தது. இரண்டு பக்கமும், இரு நிறுவனங்களின் படைப்புகளை, வேறு எந்தவித மாறுபட்ட எண்ணமும் இன்றி விரும்பும் ரசிகர்களான பயனாளர்கள் இருக்கின்றனர். இருப்பினும், இந்த ரசிகர்களில் பலர், விண்டோஸ் 8 ஸ்டார்ட் மெனு இல்லாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டி, தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் தன் பயனாளர்களைத் தன் பக்கமே வைத்துக் கொள்ள, விண்டோஸ் 10 சிஸ்டத்தை இலவசமாக வெளியிட்டது. இந்த இலவச முயற்சி, ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமாகும். மைக்ரோசாப்ட் முதல் முதலாக, ஆப்பிள் நிறுவனத்தை எதிர் கொள்ள, அதன் வழியையே கடைப்பிடித்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ லேப்டாப் கம்ப்யூட்டரை விரும்பும் ரசிகர்களின் முதல் விருப்பமாகப் பல நாட்கள் இருந்து வருகின்றது. ஆனால், அண்மையில், முதல் முதலாக, மைக்ரோசாப்ட் தானே ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரை வடிவமைத்து, அதனை லேப்டாப் கம்ப்யூட்டராகவும், டேப்ளட் பி.சி.யாகவும், சர்பேஸ் புக் என்ற பெயரில் வெளியிட்ட பின்னர், இந்த நிலை சற்று மாறத் தொடங்கியுள்ளது. பயனாளர்களிடையே நல்ல வரவேற்பினை சர்பேஸ் புக் பெற்று வருகிறது. இந்த இரண்டின் சிறப்பம்சங்களை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வேகமான இயக்கம்: சர்பேஸ் புக் வெளியீட்டிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில், மைக்ரோசாப்ட், சர்பேஸ் புக், அதன் செயல்வேகத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக்கினை விஞ்சும் என உறுதி அளித்தது. தொழில் நுட்ப செயல்பாடுகளை நடுநிலையோடு சோதனை செய்து பார்க்கும் பல ஆய்வு மையங்கள், இந்த உறுதிமொழியின் நிலை குறித்துப் பல சோதனைகளை மேற்கொண்டன. மைக்ரோசாப்ட், சர்பேஸ் புக் செயல் வேகம் குறித்து அறிவிக்கையில், மேக் புக் செயல்பாட்டைக் காட்டிலும், இரு மடங்கு வேகமாகச் செயல்படும் என அறிவித்தது. ஆனால், சோதனையில், சர்பேஸ் புக், மூன்று மடங்கு வேகமாகச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த லேப்டாப் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஜி.பி.யு.வே இதற்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டது.

தொடு உணர்திரை: தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், சர்பேஸ் புக் ஒரு டேப்ளட் பி.சி. என்றுதான் கொள்ள வேண்டும். சர்பேஸ் புக் பயன்படுத்துபவர்கள், தொடு உணர் திரையின் பயன்பாட்டினை மகிழ்வுடன் மேற்கொள்ளலாம். ஆனால், மேக்புக் பயனாளர்கள், ரெடினா டிஸ்பிளே கொண்ட திரையை எதிர்கொள்கின்றனர். இது வண்ணம் மற்றும் வண்ண அடர்த்தியில் (resolution) மிளிர்கிறது. இதன் ரெசல்யூசன் திறன் 2304×1440 பிக்ஸெல். எல்.இ.டி. பேக்லிட் ஐ.பி.எஸ். டிஸ்பிளே கிடைக்கிறது. மிகச் சிறந்த கிராபிக்ஸ் திறன் கொண்ட திரை கொண்ட சாதனங்களில் இது முன்னணி இடம் பெறுகிறது.

சாதன பரிமாணம்: இரண்டு லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பரிமாணங்களை ஒப்பிட்டால், இரண்டும் அளவிலும், எடையிலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள், அளவில் சிறிய லேப்டாப் கம்ப்யூட்டரையே விரும்புவதால், இரண்டு நிறுவனங்களுமே, இதில் அக்கறை காட்டி, கூடுமானவரை குறைவான எடையிலும், பரிமாணத்திலும் தங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களை வடிவமைத்துள்ளனர். மேக்புக் கம்ப்யூட்டரின் எடை 0.92 கிலோ. சர்பேஸ் புக் அதைக் காட்டிலும் சற்று குறைவாக 0.8 கிலோ ஆக உள்ளது.

கீ போர்ட்: கீ போர்ட்களை ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனம் இதில் நிச்சயமாக வெற்றி பெறுகிறது. பொதுவாக, எடுத்துச் சென்று பயன்படுத்தும் எந்த டிஜிட்டல் சாதனத்திலும், கீ போர்ட் முக்கிய இடம் பெறுகிறது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோவினை டேப்ளட் ஆகக் காட்டி, அதனை ஒரு முழுமையான லேப்டாப் கம்ப்யூட்டராகவும் பயன்படுத்தலாம் என்று காட்டியுள்ளது. அதனால், அதன் சிறிய டேப்ளட் அளவு, கீகளை, அதன் கீ போர்டில் நெருக்கமாக அமைக்கும்படியான நிலையைத் தந்துள்ளது. இதில் தரப்பட்டிருக்கும் மவுஸ் பேட், ஆப்பிள் மேக் புக் கம்ப்யூட்டரில் இருப்பதைக் காட்டிலும் சற்று சிறியதாகவே உள்ளது. இரண்டு சாதனங்களிலும், பின்புற ஒளி உள்ள கீ போர்ட் ஆக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேக்புக் கம்ப்யூட்டரில் உள்ள கீ போர்ட், முழுமையான ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரின் கீ போர்ட் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தரும் கீ போர்ட், சர்பேஸ் புக்குடன் வரவில்லை. இதனைத் தனியாக வாங்க வேண்டும்.
மொத்தத்தில் பார்க்கையில், இரண்டு லேப்டாப் கம்ப்யூட்டர்களும், அவற்றிற்கு விலையாகத் தரப்பட்டுள்ள பணத்திற்கான மதிப்பினைக் கொண்டதாகவே உள்ளன. குறிப்பாக நீங்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்பவராக இருப்பவராயின், செலுத்திய பணத்திற்கு இவை வேலை செய்வதனை உணர்வீர்கள்.
நீங்கள் டேப்ளட் ஸ்டைலில் ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரும் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டால், சர்பேஸ் உங்களுக்குச் சரியான தேர்வு ஆகும். மேக் புக் கம்ப்யூட்டரை விரும்பும் ரசிகர்களுக்கு, அதன் குறைவான எடை, அதிக ரெசல்யூசன் தரும் கிராபிக்ஸ் ஆகியவை நல்ல நிறைவைக் கொடுக்கும். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில், இதைத்தான் அதன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X