அசூஸ் ஸென்போன் 2 லேசர் வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2015
00:00

அசூஸ் மொபைல் நிறுவனம், அண்மையில், இந்தியாவில் தன்னுடைய Asus Zenfone 2 Laser மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ. 13,999 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த போனுக்கான முன்பதிவினை இந்தியாவில் ப்ளிப் கார்ட் இணைய தளம், சென்ற ஆகஸ்ட் 19 முதல் பெறத் தொடங்கியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதே போனின் 2 ஜி.பி.மாடல் போன் சென்ற மாதம் ரூ.9,999 என விலையிட்டு வெளியிடப்பட்டது. தற்போது, 3 ஜி.பி. மாடல் விற்பனைக்கு ப்ளிப் கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
இதன் திரை 5.5 அங்குல அளவில் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் சிப் Octa-Core Snapdragon 615 SoC ஆக உள்ளது. ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, 128 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பின்புறக் கேமரா, 13 எம்.பி.திறனுடன், ரியல் டோன் ப்ளாஷ் மற்றும் லேசர் ஆட்டோ போகஸ் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடன், 85 டிகிரி கோணத்தில் வைட் ஆங்கிள் லென்ஸுடன் தரப்பட்டுள்ளது.
இதன் பரிமாணம் 152.5 x 77.2 x 10.8 மிமீ.எடை 170 கிராம். நெட்வொர்க் இனைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இந்த மாடல் போன் வெளியாகியுள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X