விண்டோஸ் 10க்குத் தேவையான செயலிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2015
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்கள். அடுத்து உடனடியாக, இந்த சிஸ்டத்தில் இயங்கும் சில செயலிகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்வது, உங்கள் கம்ப்யூட்டர் பணி அனுபவத்தினை மகிழ்ச்சியாக்கும். அத்துடன் இந்த கூடுதல் வசதிகள், எளிதாகவும், விளையாட்டுப் போக்கில் மேற்கொள்ளும் அனுபவத்தினைத் தருவதாகவும் அமையும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், மாறா நிலையில் பல செயலிகள் இருந்தாலும், மற்ற நிறுவனங்களின் சில செயலிகள், உங்கள் செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருக்கும். உங்கள் பணியை கூடுதல் மதிப்பு மிக்கதாய் அமைக்கும். நீங்கள் உருவாக்கும் முக்கியமான டேட்டாவினைப் பாதுகாக்கும். போட்டோ மற்றும் டெக்ஸ்ட்டுடன் செயல்பட துணை புரியும். அந்த வகையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் வண்ணம் தயாராய் கிடைக்கும் சில செயலிகளைப் பார்ப்போம். இணையத்தில் இலவசமாய்க் கிடைக்கும் செயலிகள் மட்டும் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

வி.எல்.சி. மீடியா பிளேயர்: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், அதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இலவசமாகத் தரப்பட்ட விண்டோஸ் மீடியா செண்டர் செயலி, தற்போது கட்டணம் செலுத்தி மட்டுமே பெறக் கூடிய ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. இது குறித்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியவர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடிந்து கொண்டனர். இவர்களுக்கு உதவும் வகையில், மிகவும் பிரபலமான வி.எல்.சி. மீடியா பிளேயர் கிடைக்கிறது. இதனை, இலவசமாக http://www.videolan.org/vlc/download-windows.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெறலாம். இதன் மூலம், டிவிடி, விடியோ சி.டி. ஆகியவற்றுடன் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ (குறிப்பாக MP4, MOV, MPEG, OGG, Real, FLAV, ASF/WMV/WMA, AVI) பைல்களை இயக்குகிறது. இதில் எந்தவிதமான கோடெக்ஸ் பிரச்னையும் வருவதில்லை.

ஸ்டிக்கி நோட்ஸ் ப்ரோ: நம் பணியில் ஆழ்ந்திருக்கையில், சிலவற்றை எழுதி வைக்க நமக்கு மானிட்டர் திரையில் கிடைப்பது ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் செயலி. இது மைக்ரோசாப்ட் வழங்கும் ஓர் அருமையான செயலியாகும். இதனை https://www.microsoft.com/en-us/store/apps/sticky-notes-pro/9nblggh1jw6q என்ற இணைய தளத்தில் இருந்து, இலவசமாகத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளலாம். விண்டோஸ் 10க்கென உருவாக்கப்பட்டுள்ளது ஸ்டிக்கி நோட்ஸ் ப்ரோ (Sticky Notes Pro). இந்த செயலியின் மூலம், ஸ்டிக்கி நோட்ஸின் அளவை, நம் விருப்பப்படி அமைக்கலாம். நம் இஷ்டப்படி வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஸ்டிக்கி நோட்ஸ் இதழ்களை மானிட்டரில் எந்த இடத்திலும் எடுத்துச் சென்று அமைக்கலாம். பக்கங்களையும் அதிகப்படுத்தலாம்.

அடோப் போட்டோ ஷாப் எக்ஸ்ப்ரஸ்: அடோப் போட்டோ ஷாப் புரோகிராமின், சுருக்கப்பட்ட பதிப்பு. போகிற போக்கில், இதன் துணையுடன், நம் போட்டோக்களை டச் அப் செய்திடலாம். படங்களின் அளவைச் சுருக்குவது, சுழற்றி அமைப்பது, வண்ணங்களை மாற்றுவது, பார்டர்களை அமைப்பது போன்றவற்றை அமைப்பதுடன், சமூக வலைத் தளங்களில் நேரடியாக எடுத்துச் சென்று பதியவும் இது உதவுகிறது. இதனை, இலவசமாக, http://www.photoshop.com/products/photoshopexpress என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.

நோட்பேட் ++: நம் கை வசம் டெக்ஸ்ட்டை எடிட் செய்திட, சிறிய அளவிலான புரோகிராம் ஒன்றை வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு உதவிடும் வகையில் நமக்குக் கிடைப்பது நோட்பேட் ++. இதனை இலவசமாக https://notepad-plus-plus.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் ஒன்றுக்கு மேற்பட்ட டேப்கள் தரப்படுவதால், ஒரே நேரத்தில் பல டெக்ஸ்ட் பைல்களைக் கையாள முடியும். மேலும் வாக்கிய அமைப்பு, சொற்கள் அமைப்பில் பல கூடுதல் வசதிகளை இதில் மேற்கொள்ள வழிகள் தரப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, சொற்கள் தானாக நிறைவு செய்திடும் வசதி, சொற்களைத் தேடி, மாற்றும் வசதி ஆகியவையும் கிடைக்கின்றன.

பைல் சுருக்கும் ஸிப்: விண்டோஸ் 10 சிஸ்டத்திலேயே ஸிப் செய்வதற்கும், ஐ.எஸ்.ஓ. பைல்களைத் தயார் செய்வதற்கும் வசதிகள் உள்ளன. இருந்தாலும், ஓப்பன் சோர்ஸ் வழியில் இயங்குபவர்கள், விண்டோஸ் அளிக்கும் ஸிப் பைல்களை விரும்பாமல் இருக்கலாம். 7 ஸிப் செயலி, இவர்களுக்கான பைல் வடிவமைப்பில் டேட்டாவைச் சுருக்கித் தருவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. TAR, GZIP மற்றும் 7z போன்றவை உட்பட பல பார்மட்களைக் கையாள்கிறது. அவற்றில் ARJ, CAB, DMG, MSI, RAR மற்றும் VHD ஆகியவை உள்ளன. எனவே, அனைத்து வகை ஸிப் பைல் பார்மட்களை உருவாக்கவும், விரிக்கவும் உங்களுக்கு ஒரு செயலி தேவை என்றால் http://www.7-zip.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் 7 ஸிப் செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்திடலாம்.

ஸ்கைப்: விண்டோஸ் 10க்கான ஸ்கைப் தற்போது கிடைக்கிறது. பெரும்பாலானவர்களால், விடியோ மற்றும் உடனடி மெசேஜ் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் செயலி, ஸ்கைப் ஆகும். இதனை https://www.skype.com/en/ என்ற இணைய தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், உடனடி செய்தி அனுப்புதல், ஒலி அழைப்புகளை ஏற்படுத்துதல், விடியோ வழி அழைப்பு ஏற்படுத்துதல் மற்றும் குழுவாக விடியோ அழைப்புகளை அனுப்புதல் எனப் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்கைப் கிரெடிட் கட்டணம் மாதந்தோறும் செலுத்தி, பன்னாட்டளவில் அழைப்புகளை மேற்கொள்ளவும் இதில் வசதி உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள செயலிகள் தவிர, வேறு பல செயலிகள், கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் கிடைக்கின்றன. அவற்றையும் பெற்றுப் பல கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X