தகவல்களைத் திரட்டும் விண் 10க்கு எதிராக
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2015
00:00

புதியதாக வந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாடம், நம்முடன் உறவாடி, நமக்கு அன்றைய பணிகளை நினைவு படுத்தும் சேவையை, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் மேற்கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் ட்ரெயின் அல்லது விமானத்தில் பயணம் செல்ல இருக்கிறீர்கள். விண்டோஸ் 10 சிஸ்டமானது, அன்று, நீங்கள் புறப்பட வேண்டிய நேரத்திற்கு (ட்ரெயின் அல்லது விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாகவே) உங்களை நினைவு படுத்தும். நீங்கள் செல்லக் கூடிய வழியில் அதிக வாகனப் போக்குவரத்து இருந்தால், இன்னும் சற்று முன்னதாகவே நினைவு படுத்தும். இதனை எப்படி மேற்கொள்ள முடியும்? விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள காலண்டரில் இந்த பயணம் குறித்து முன்னதாகவே குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு பயணச் சீட்டு உறுதி செய்யப்படும் மின் அஞ்சல், விமான நிறுவனத்திடமிருந்து அல்லது தொடர்வண்டி மையத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும், விண்டோஸ் 10 அணுகி, தகவல்களைப் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, அதே நேரத்தில், உங்கள் இருப்பிடத்தையும், விமான அல்லது தொடர்வண்டி நிலைய இடம் அறிந்து செயல்பட்டு, நினைவு படுத்தும். எனவே, உங்கள் தனி நபர் தகவல்களை, விண்டோஸ் 10 தானாகவே அறிந்து கொள்கிறது.
இதற்கு கீ போர்டில் நீங்கள் அழுத்தும் கீகளை அறிந்து செயல்படலாம். அல்லது, நீங்கள் சமூக வலைத் தளங்களில் பதியும் தகவல்களை அறியலாம். உங்களிடம் அனுமதி பெறாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை, மிகவும் ஆபத்தான, பொதுவான வலைப்பின்னலில் இணைக்கலாம். அதற்கு நீங்கள் பயன்படுத்தும் இணைய சேவையினையே பயன்படுத்தலாம்.
இப்போது நாம் தான் முடிவெடுக்க வேண்டும். மேலே சொல்லப்பட்ட வகையில், நம் தனி நபர் தகவல்களை வழங்கி, நம் சுதந்திரத்தினைப் பறிகொடுத்து, இந்த வசதிகளை மேற்கொள்ள வேண்டுமா? அல்லது, விண்டோஸ் 10 இத்தகைய தகவல்களைப் பெறுவதைத் தடுத்து, இந்த வசதிகளைத் துறக்க வேண்டுமா?
நீங்கள் இரண்டாவது முடிவை எடுத்தால், உங்களுக்கு உதவ ஓர் அருமையான செயலி, இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பெயர் O&O ShutUp10. இந்த செயலி http://www.oo-software.com/en/shutup10 என்ற இணைய தள முகவரியில் உள்ளது. இதனை இயக்குவதன் மூலம், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த எந்த வசதிகள் உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து தீர்மானித்து செட் செய்து வைக்கலாம். தேவையற்ற வசதிகள், அல்லது, நம் தனி நபர் தகவல்களைக் கவர்ந்து அதன் அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் வசதிகளை நிறுத்தலாம்.
இந்த O&O ShutUp10 வசதி முற்றிலும் இலவசம். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதில்லை. இதனை நேரடியாக, உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கலாம். இது தேவையற்ற எந்த செயலியையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்காது.
கம்ப்யூட்டர் அமைக்கப்பட்டிருக்கும் இடம் அறிந்து அதன் அடிப்படையில் இயங்கித் தரப்படும் வசதிகளை, இதன் மூலம் உங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம். விண்டோஸ் சிஸ்டத்திற்கெனத் தரப்படும் அப்டேட் பைல்களையும், நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த O&O ShutUp10 மூலம் தனி நபர் தகவல்களை சிஸ்டம் பெறுவதைத் தடுக்கும்போது, விண்டோஸ் 10- சிஸ்டம் செட்டிங் எதுவும் மாறாது. இந்த O&O ShutUp10 செயலியை, ப்ளாஷ் ட்ரைவிலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X