இணைய தளங்களில் ஆடியோவினை நிறுத்த
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2015
00:00

இணைய தளங்களைக் காண்கையில், அதில் பதியப்பட்டுள்ள ஆடியோ பைல்கள் தாமாகவே இயங்கத் தொடங்கும். பல தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், எந்த தளத்திலிருந்து இந்த விடியோ அல்லது ஆடியோ ஒலி வருகிறது என்று அறியவே சில நொடிகள் அல்லது நிமிடங்கள் ஆகும். இது அண்மைக் காலத்தில் பிரவுசர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்தில் சாத்தியமாகிறது. நாம் நம்முடைய ப்ரவுசர் ப்ளக் இன்களை கிளிக் டு ப்ளே என அமைத்திருந்தாலும், ஆடியோ ஒலிப்பது நிற்காது. தற்போது வரும் பிரவுசர்கள், ஆடியோ உள்ளது எனக் காட்டும் குறியீடு கொண்டவையாகவே உள்ளன. இதன் மூலம், எந்த டேப்பிலிருந்து ஆடியோ ஒலிக்கிறது என அறிந்து கொள்ளலாம். இதே பிரவுசர்கள், குறிப்பிட்ட டேப்பில், ஆடியோ ஒலிப்பதை நிறுத்தவும் வசதியைத் தருகின்றன.
முன்பு குரோம் பிரவுசரில், மறைக்கப்பட்ட நிலையில் இந்த குறியீடு இருந்தது. தற்போது நிலையாக இது காட்டப்படுகிறது. ஆப்பிள் சபாரி பிரவுசர் தான், இதனை முதலில் மாறா நிலையில் தந்தது. மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இணைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

கூகுள் குரோம்: ஆடியோவினை நிறுத்தும் வசதி, குரோம் பிரவுசரில் தற்போது மாறா நிலையில் தரப்பட்டுள்ளது. இது எங்கே மறைக்கப்பட்டுள்ளது என்று தேடித் தெரிய வேண்டியதில்லை. எந்த டேப்பில் உள்ள தளத்திலிருந்து ஆடியோ ஒலிக்கிறது என்று முதலில் கண்டறியுங்கள். அந்த டேப்பில் ஒரு ஸ்பீக்கர் குறியீடு காட்டப்பட்டிருக்கும். இந்த டேப்பில் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் பட்டியலில், “Mute Tab” என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தால், ஆடியோ ஒலிப்பது நின்றுவிடும். அப்போது அந்த ஸ்பீக்கர் குறியீட்டின் மீது பெருக்கல் அடையாளம் காட்டப்படும். இது, ஆடியோ நிறுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. மீண்டும் ரைட் கிளிக் செய்து, “unmute audio' என்பதில் கிளிக் செய்தால், ஆடியோ ஒலிக்க ஆரம்பிக்கும்.
இதனை எந்த டேப்பிலும் நீங்கள் மேற்கொள்ளலாம். டேப்பில் தளம் வரும் முன்னரே, அதில் ஆடியோ இருந்தால், இசைக்க வேண்டாம் என்று அமைக்கலாம். தொடக்கத்தில், இந்த குறியீடு மறைக்கப்பட்டிருந்ததற்குக் காரணம், பயனாளர்கள் தங்களை அறியாமலேயே இதில் கிளிக் செய்து, ஆடியோவினை நிறுத்திவிட்டு குழப்பமடைவார்கள் என்று அச்சப்பட்டதுதான். பின்னர், குரோம் உருவாக்கிய பொறியாளர்கள் கலந்து பேசி, இதனை வெளிப்படையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைத்தனர்.

ஆப்பிள் சபாரி: ஆப்பிள் வடிவமைத்து வழங்கும் சபாரி பிரவுசரில் இந்த ஆடியோ குறியீடு மாறா நிலையில் வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இதனைத் தந்தது ஆப்பிள் நிறுவனம் தான். குரோம் பிரவுசரில் தெரிவது போல, டேப் ஒன்றின் “x” பட்டன் முன்னதாக, ஸ்பீக்கர் ஐகான் இருக்கும். இதில் கிளிக் செய்து, ஒலியை நிறுத்தலாம்; பின் மீண்டும் இயக்கலாம். டேப்பில் ரைட் கிளிக் செய்து முன்பு கூறியது போல பட்டியலில் இருந்தும் ஆடியோவினை நிறுத்தலாம். ஆனால், குரோம் பிரவுசரில் உள்ளது போல, குறிப்பிட்ட ஒரு டேப்பில், தளம் இறங்கும் முன்னரே, ஆடியோவினை நிறுத்த சபாரியில் வழி இல்லை.

மொஸில்லா பயர்பாக்ஸ்: பயர்பாக்ஸ் பிரவுசரில் ஆடியோ குறியீட்டினை அமைக்கும் முயற்சியில், மொஸில்லா இறங்கியுள்ளது. அண்மையில் பயர்பாக்ஸ் பிழைக் குறியீடுகள் குறித்த அறிக்கையில், பயர்பாக்ஸ் 42 பதிப்பில், இது மாறா நிலையில் தரப்படும் எனத் தரப்பட்டுள்ளது. சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளதில் இது காணப்படுகிறது. சபாரி மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ளது போலவே, இதுவும் செயல்படுகிறது. குரோம் பிரவுசரில் உள்ளது போலவே, தளம் பெறப்படும் முன்னரே, அதில் உள்ள ஆடியோ ஒலிக்காமல் இருக்கும்படியும் செய்திடலாம். நீங்கள் இன்னும் பழைய பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்து, அதில் இந்த ஆடியோவினை நிறுத்தும் வசதியை இணைக்க வேண்டும் எனில், “Mute Tab.” என்னும் எக்ஸ்டன்ஷனைப் பயன்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் எட்ஜ்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் டேப்பில் ஆடியோவிற்கான குறியீடு தரப்படவில்லை. அதற்குப் பதிலாக, டேப்பின் இடது பக்கத்தில் இந்தக் குறியீடு தரப்பட்டுள்ளது. ஆனால், டேப்பினை ஒலிக்காத வகையில் குறியீடுகளை இன்னும் இணைக்கவில்லை. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராமும் இல்லை. விரைவில், மைக்ரோசாப்ட் இதனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.
எந்த பிரவுசரும் ஆடியோவினை இயக்காத வகையில், விண்டோஸ் சிஸ்டத்தில் செட்டிங்ஸ் அமைக்க முடியும். விண்டோஸ் இயக்கத்தில், சிஸ்டம் ட்ரேயில், ஸ்பீக்கர் ஐகானில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் “Open Volume Mixer” என்பதனைத் திறக்கவும். இங்கு ஒலியைக் குறைக்கலாம் அல்லது மொத்தமாக இல்லாத வகையிலும் அமைக்கலாம். ஆனால், அனைத்து ஒலிகளும் மொத்தமாக நிறுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பின்னர், மீண்டும் ஒலி இயக்கப்பட வேண்டும் என விரும்பினால், இதே வழியில் சென்று, இயக்கும் வகையில் அமைக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X