பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2015
00:00

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, அனைத்திலும் புதிய கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது என்பது, தங்களின் டாஸ்க் மானேஜர் குறித்த கட்டுரை தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் விளக்கங்கள், எந்த அளவிற்கு அவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நீங்கள் தெளிவாக அலசி ஆய்வு செய்து தந்திருக்கிறீர்கள் என்பதனை உறுதிப்படுத்துகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வாழ்த்துவதோடு, கட்டுரை எழுதிய உங்கள் ஆசிரியரையும் பாராட்டுகிறேன்.
பேரா. டாக்டர். எம். ஜெகதீசன், மதுரை.

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், கிட்கேட் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், அதன் நிலையான தன்மையும், பாதுகாப்பும் ஆகும். அதன் பின் புதிய சிஸ்டம் வந்த போதெல்லாம், 'அப்கிரேட் செய்வதனால், ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நாங்கள் பொறுப்பல்ல' என்ற எச்சரிக்கையத் தந்து, பயனாளர்களை கிட்கேட் சிஸ்டத்திலேயே இருக்க வைத்துவிட்டது கூகுள்.
என். செல்வராஜ், கோவை.

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் வியக்கத்தக்க வழிகளாகக் காட்டப்பட்டவை அனைத்தும், அந்த சிஸ்ட்த்திற்கே உரியதான புதிய வசதிகளைத் தரும் வழிகளாக உள்ளன. மைக்ரோசாப்ட் தன் புதிய சிஸ்டத்தில் அதிகமாகக் கவனம் செலுத்தியது, இதன் மூலம் தெரிய வருகிறது.
என். பெரியசாமி, மதுரை.

விண்டோஸ் 10 தரும் வசதிகளில், பின்னணியில் உள்ள விண்டோவை ஸ்குரோல் செய்திடத் தந்துள்ள வசதி சூப்பர் டெக்னிக் ஆகும். இது போன்ற உத்திகளுக்காகவாவது, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.
கா. உத்தமராஜ், காரைக்கால்.

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், உடல் மற்றும் மன நிலைக்கு இத்தனை பிரச்னைகளா! வியக்க வைக்கிறது உங்களின் கட்டுரை. இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகளைச் சரியாக எடுத்துக் கொண்டு, பலர் தங்கள் வழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள் என்பது உறுதி.
டி. லூயி பிரான்சிஸ் சேவியர், தஞ்சாவூர்.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ மற்றும் சர்பேஸ் புக் ஆகியவற்றை ஒப்பிடும் கட்டுரையில், எதனையும் குறை சொல்லாமல், இறுதியாகச் சரியான முடிவினைக் கூறி பயனாளர்கள் பக்கமே முடிவை விட்டுவிட்டது மிக அருமை. ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ற கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதே உண்மை.
மா. திலகவதி, தேனி.

'குறைந்த மின்சக்தியில் கம்ப்யூட்டரை இயக்க' என்ற கட்டுரையில், ஸ்கிரீன் சேவர்கள் குறித்த குறிப்பு, இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அது ஏதோ, திரையை அழகுபடுத்த என்று எண்ணிக் கொண்டு, அதில் எத்தனையோ அனிமேஷன்களைக் கொண்டு இன்றைய இளைஞர்கள் அமைத்து வருகிறார்கள். அவர்களுக்கு இணையத்திலும் அத்தகைய ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கின்றன. இவை மின்சக்தியை மட்டுமின்றி, கம்ப்யூட்டரின் திறனையும் உறிஞ்சும் என்பதை அழகாக விளக்கி உள்ளீர்கள். நன்றி.
பேரா. அ. சிவமுருகன், கோவை.

ஸ்டார்ட் மெனுவில் ரீ சைக்கிள் பின் குப்பைத் தொட்டி என்ற புதுமை நிச்சயம் அனைவரையும் கவரும். டெஸ்க்டாப்பில் வைத்து, பல ஐகான்களுக்குள் தேடி, அதனைக் கண்டு பிடித்து, குப்பையை நீக்குவது சற்று கூடுதலாக நேரம் எடுக்கும் விஷயமாகவே உள்ளது. இது விண்டோஸ் 10ல் தவிர்க்கப்பட்டுள்ளது.
சா. இந்திராணி, திருச்சி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X