மோசமாக எஸ்.எம்.எஸ். தரும் எண்களைத் தடை செய்திட
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2015
00:00

நம்மில் பலரின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ் செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், “அனுப்பவே இல்லை” என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும். பலர், இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கி, அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். காவல் துறைக்குச் சென்றால், பலருக்கு இது தெரிந்துவிடும் என்ற பயமும் இருக்கும். நீங்களாகவே, இதனைத் தடுத்துவிடும் வழிகள் உள்ளன. அதனை இங்கு காணலாம்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் ““SMS blocker”” என டைப் செய்து தேடவும். அல்லது நேரடியாக https://play.google.com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker - Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்டப்படும். இதனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு •SMS blocking என்பதிலும் Spam auto blocking - என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.) இனி, ஸ்பேம் செய்திகள் வரும்போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, ““Block”” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். “Add New” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை: போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல், எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல், மற்றும் நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும்.
அடுத்ததாக, “Filter” என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajamani - Kodaikanal ,இந்தியா
22-நவ-201521:38:49 IST Report Abuse
Rajamani மிஹவும் முக்கிய செயலி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X