பயனாளர்களை வேவு பார்க்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் கூகுள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2015
00:00

டிஜிட்டல் உலகைப் பாதுகாப்பதற்கெனப் பல செயலிகளை உருவாக்கி வரும் 'அவாஸ்ட்' நிறுவனம், அண்மையில் ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் புரோகிராம்கள், நம்முடைய தனி நபர் தகவல்களையும், நம் செயல்பாடுகளையும் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அறிவித்துள்ளது. குற்றச் சாட்டிற்கு ஆளான சில நிறுவனங்கள், இதனை மறுக்கவில்லை. இது குறித்த விபரம் பின்வருமாறு:
குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த மூன்று நிறுவனங்களும், தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து, அவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய விளம்பரங்களை, அவர்கள் பார்க்கும் இணைய தளத்தில் காட்டுவதற்காக, அவர்களின் தனி நபர் தகவல்களைத் தொடர்ந்து வேவு பார்த்து அறிந்து தங்கள் பயன்பாட்டிற்கென, பதிவு செய்து வைத்துப் பயன்படுத்துகின்றன. இந்த வேவு பார்த்தலை, பெரும்பாலான பயனாளர்களும் அறிந்தே வைத்துள்ளனர்.
“கூகுள் ஒரு விளம்பர நிறுவனம். கூகுள் நிறுவனத்தின் வருமானத்தின் அடைப்படை AdWords என்ற செயலி வழியாக, விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் கிடைப்பதுதான். எனவே, தங்கள் செயலிகளைப் பயன்படுத்துவோரின் ஆர்வம் எதில் உள்ளது என அறிந்து, அவர்களுக்கான பொருட்களின் விளம்பரங்களை கூகுள் காட்டுகிறது. இதன் அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை'' என்பதே அந்நிறுவனம் மற்றும் பல பயனாளர்களின் கருத்தாகும். பயனாளர்களும், இந்த வகையில் என்ன நடக்கிறது என அறிந்தே இருக்கிறார்கள் என அவாஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, வின்சென்ட் கூறியுள்ளார். மொபைல் போன் திருட்டினைக் கண்டறிந்து சொல்லும் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வாட்ஸ் அப் செயலியும், பயனாளர்களின் தனிநபர் டேட்டாவினை முழுமையாக அறிந்து கொள்வதில் ஈடுபடுவதாகக் கூறினார். வாட்ஸ் அப் நம்மிடம் இருந்து பெறும் நம்மைப் பற்றிய விபரங்கள், பேஸ்புக்கில் நமக்கான விளம்பரங்களைக் காட்ட பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல்களின் அடிப்படையில், பேஸ்புக்கில் உங்களுக்கான விளம்பரங்கள் தரப்படுகின்றன.
இவரின் கூற்று குறித்து, கூகுள் நிறுவன நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “அவாஸ்ட் நிறுவன அதிகாரியின் அறிக்கையை முழுமையாகப் பெறாமல், கருத்து கூறக் கூடாது என்பது எங்கள் நிறுவனத்தின் கொள்கையாகும்” என்று கூறினார்.
கூகுள் நிறுவனத்தின் தனிநபர் டேட்டா குறித்த கொள்கை (privacy policy) என்ன கூறுகிறது? “ நீங்கள் எங்களின் சேவைகளைப் பயன்படுத்துகையில், நீங்கள் உங்கள் தகவல்களுக்காக எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். தேடல், ஜிமெயில் அஞ்சல்கள் மற்றும் மேப்ஸ் போன்ற எங்கள் சேவைகளை, உங்களுக்குச் சிறப்பாகத் தருவதற்கு, உங்களைப் பற்றி நாங்கள் பெறும் டேட்டா உதவுகின்றன. இதே தகவல்கள், சார்ந்த விளம்பரங்களைக் காட்டுவதில் எங்களுக்கு உதவுகின்றன. இதன் மூலம், ஒவ்வொருவருக்கும் இலவசமாக எங்களால் சேவை செய்திட முடிகிறது.” இப்படித்தான், கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து, இது குறித்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
அவாஸ்ட் தலைமை நிர்வாகி வின்செண்ட் கூறுகையில், “பயனாளர்களும் தாங்கள் தொடர்புகள் குறித்த தகவல்களை மற்றவர்களுடன், மொபைல் போன்களில் பயன்படுத்தும் செயலிகள் வழியாகப் பகிர்ந்து கொண்டு, தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை மீறுகின்றனர்” என்றார்.
எடுத்துக் காட்டாக, நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த, உங்களின் தொடர்புகள் குறித்த அனைத்து டேட்டாவினையும், வாட்ஸ் அப் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள சம்மதிக்கிறீர்கள். அதாவது, அவை பேஸ்புக் நிறுவனத்திற்குச் செல்கின்றன. உங்கள் நண்பர்கள் சார்ந்த தகவல்களை, இது போல, அவர்கள் தொடர்பு கொண்ட அல்லது தொடர்பு கொள்ளாத நிறுவனம் ஒன்றுடன் பகிர்ந்து கொள்ள, உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?
சென்ற செப்டம்பரில், ஆண்ட்ராய்ட் போன்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் 100 அப்ளிகேஷன்கள் குறித்து, அவாஸ்ட் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவாஸ்ட் வின்ஸெண்ட் அறிவித்துள்ளார். இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தை அளிப்பதுடன், எச்சரிக்கையையும் தந்துள்ளன.
இந்த ஆய்வில் கண்டறிந்த தகவல்களின் படி, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் நாம் பயன்படுத்தும் 99% செயலிகள், அதாவது இந்த செயலிகளைத் தந்த நிறுவனங்கள், இந்த போன்களை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. அதாவது, ஒரு பயனாளர், போனைப் பயன்படுத்துவது போல, அவை தொலைவில் இருந்தே இயக்க முடியும். இந்த செயலிகளில் 92%, நாம் பயன்படுத்தும் நெட்வொர்க்கினைக் காண இயலும். இந்த 100 செயலிகளில், பத்தில் ஒன்று, நாம் மேற்கொள்ளும் ஆடியோவினைப் பதிய முடியும். படங்களை எடுக்க முடியும். விடியோ பதிய முடியும். பத்தில் ஒன்பது செயலிகள், நாம் ஸ்டோர் செய்து வைத்துள்ளவற்றைக் கண்டறிய முடியும். இவற்றை, அந்த செயலிகள், மாற்ற முடியும், நீக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள, விளம்பரத்திற்கும் பாலியல் தகவல்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் மால்வேர் புரோகிராம்கள், பல லட்சம் பயனாளர்களின் போன்களின் செயல்பாட்டினை முடக்கின என்பது இதற்கு ஆதாரம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக்கர்களின் ஒரு குழுவினர், 50 முறைகளுக்கு மேல், கூகுள் பிளே ஸ்டோரில், ஒரே மாதிரியான வழிகளில் நுழைந்துள்ளனர். இது மூன்று மாதங்களில் நடந்தேறியுள்ளது. அவர்கள் தங்களின் அப்ளிகேஷன்களை, அனுமதியின்றி பதித்துள்ளனர். இந்த அப்ளிகேஷன்கள், கேம்ஸ் போல தோற்றமளிக்கின்றன. ஆனால், அவற்றில் கிளிக் செய்தால், பாலியல் காட்சிகளைக் கொண்டுள்ள தளங்களுக்கு இழுத்துச் செல்கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X