ஆப்பிள் வாட்ச் முன்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2015
00:00

ஆப்பிள் வாட்ச் வாங்க விரும்புவோர், இந்தியாவில் முன்பதிவு செய்திடும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என Grabmore.in என்னும் வர்த்தக இணைய தளம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இன்னும் ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கான, அதிகார பூர்வ அறிவிப்பினை ஆப்பிள் இந்தியா நிறுவனம், இந்த தகவலை எழுதும் வரை, வெளியிடவில்லை. இருப்பினும், விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராப்மோர் (Grabmore) நிறுவனம், அமெரிக்காவில் இருந்து, சாதனங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. 38மிமீ ஸ்போர்ட் மாடல் வாட்ச் ஒன்றின் முன்பதிவு விலை ரூ.36,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய, 42 மிமீ அளவிலான வாட்ச் வாங்க முன்பதிவிற்கு ரூ. 42,199 விலையாகும். அமெரிக்காவில் இந்த வாட்ச் விலை 349 டாலர் மட்டுமே. இந்தியப் பணத்தில், இன்றைய அந்நிய செலவாணியில் இது ரூ. 22,678 ஆகிறது. எனவே, ஆப்பிள் நிறுவனம் விலை அறிவிக்கும்போது, இன்னும் குறைவாகவே விலை இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ரூ.31,000 ஆக இது இருக்கலாம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டளவில் வெளியான ஆப்பிள் வாட்ச், இரண்டு அளவில் விற்பனைக்குக் கிடைக்கும். (38 மற்றும் 42மிமீ). இந்த அளவுகளில், மூன்று மாடல்களில், (Apple Watch, Apple Watch Edition and Apple Watch Sport) கிடைக்கும். முதல் இரண்டு மாடல்களின் திரை சபையர் கிறிஸ்டல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் எடிஷன் வாட்ச், Ion-X glass என்னும் உறுதியான கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச் களிலிருந்து இரண்டு அம்சங்களில், ஆப்பிள் வாட்ச் வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது. Force Touch and digital crown என்ற இரண்டு அம்சங்கள் இதில் மட்டுமே உள்ளன. திரையில் ஸ்குரோல் செய்திடவும், ஸூம் செய்திடவும் டிஜிட்டல் க்ரவுண் உதவுகிறது. இந்த க்ரவுணில் தொட்டு, முந்தைய பக்கத்தினைப் பெறலாம். Force Touch தொழில் நுட்பம், ஏற்கனவே ஐபோன் 6 எஸ் போனில், புதியவகையில் முப்பரிமாண தொடு வசதியைத் தந்தது. தொடு திரைகளில் tap என்னும் தட்டும் செயல்பாட்டிற்கும், அழுத்தும் செயல்பாட்டிற்குமான வேறுபாட்டினை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச், உள்ளாக மைக் ஒன்றையும் ஸ்பீக்கர் ஒன்றையும் கொண்டுள்ளது. எனவே, ஐபோன் ஒன்று, புளுடூத் வழியாக அல்லது வை பி வழியாக இணைக்கப்படுகையில், ஆப்பிள் வாட்ச் வழியாக உரையாடலை மேற்கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்சினைக் கைகளில் அணிந்து கொள்ளத் தரப்படும் வசதியிலும் மூன்று வகையான ஸ்ட்ராப் தரப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் மாடலில், 18 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டு, அதன் வெளிப்புற குப்பி உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆபரணத் தங்கத்தினைக் காட்டிலும், மிக உறுதியாக இருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பக்கிள் மற்றும் பின்களும், இதே 18 காரட் தங்கத்தினால் ஆனவையாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X