இந்த வார இணைய தளம்: டாகுமெண்ட்டில் சொல் பயன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2015
00:00

வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், சில வேளைகளில் பயன்படுத்திய சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். அதே பொருள் தரும் வேறு சொல்லைத் தேடிப் பெற்று பயன்படுத்த சற்று சோம்பல் படுவோம். இல்லை எனில், இத்தனை முறை பயன்படுத்துவோம்; பின்னர் மாற்றிக் கொள்வோம் என திட்டமிட்டிருக்கலாம். அல்லது, எழுதி முடித்த பின்னர், பலமுறை வரும் சொல்லைக் கண்டறிந்து மாற்றலாம் என எண்ணியிருப்பீர்கள். எத்தனை முறை ஒரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எப்படி அறிவது? இதற்கெனவே ஓர் இணைய தளம் உள்ளது. இந்த தளத்தின் பெயர் Word Frequency Counter.
இதன் பெயருக்கேற்ப, ஒரு சொல் எத்தனை முறை ஒரு டெக்ஸ்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிந்து சொல்கிறது. இந்த தளம் சென்றவுடன், இதன் கவுண்ட்டரில், டெக்ஸ்ட் பாக்ஸ் ஒன்று தரப்படுகிறது. இதில் நீங்கள் சோதனைக்குள்ளாக்க விரும்பும் டெக்ஸ்ட்டை அப்படியே ஒட்டலாம். உடனே, இந்த தளம், சொற்கள் இடம் பெறும் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்கிறது. நான் அண்மையில் எழுதிய டாகுமெண்ட் ஒன்றில், விளக்கம் ஒன்றை வர்ணிக்க “awesome” என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தினேன். பின்னர், அது எத்தனை முறை வந்திருக்கிறது என்று கண்டறிந்து, சிலவற்றிற்கு வேறு ஒரு இணையான சொல் பயன்படுத்த எண்ணி இந்த தளத்தைப் பயன்படுத்தினேன்.
டெக்ஸ்ட்டை ஒட்டி வைத்த பின்னர், அதில் உள்ள Submit பட்டனை அழுத்த வேண்டும். உடன் உங்கள் டெக்ஸ்ட் அலசப்பட்டு, அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும், தனித்தனியே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காட்டப்படுகிறது. இதில் and, I, but, it, என்ற பொதுவான சொற்களும் கூட இடம் பெறும். நாம் இவற்றை விட்டுவிடலாம்.
இந்த தளத்தின் சேவை, நாம் எழுதும் ஒரு கட்டுரையின் மொழியின் ஆளும் தன்மையை சிறப்பாக்க உதவும். அது மட்டுமின்றி, நாம் அறிந்து வைத்திருக்கும் சொல் வளத்தின் தன்மையயும் காட்டுகிறது.
ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதுவோர் அனைவரும் சென்று பயன்படுத்த வேண்டிய தளம் இது. இதன் முகவரி: http://www.writewords.org.uk/word_count.asp

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X