பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2015
00:00

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கக் கூடிய மற்ற நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட் தரும் செயலிகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவையாக உள்ளன. குறிப்பாக, அடோப் போட்டோ ஷாப் எக்ஸ்ப்ரஸ் குறித்து, இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உங்களுடைய பல கட்டுரைகள் தந்த ஊக்கத்தில், விண்டோஸ் 10க்கு மேம்படுத்திவிட்டேன். இது போன்ற கூடுதல் வசதிகள், அதனைப் பயன்படுத்துவதில் உற்சாகத்தைத் தரும் என்பது உண்மை. தங்களுக்கு நன்றி.
என். ஜெயசீலன், தாம்பரம்.

வேறு எந்த மீடியா புரோகிராமுடன் ஒப்பிட்டாலும், மிகச் சிறப்பான அம்சங்களைக் கொண்டு இயங்கும் வி.எல்.சி. மீடியா பிளேயர் தான் முதல் இடம் பெறுகிறது. தொடர்ந்து பல பார்மட்களில் உள்ள ஆடியோ மற்றும் விடியோ பைல்களை இயக்கும் வசதிகளை இணைத்துத் தருகிறது. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாக ஒரு மீடியா சென்டரைத் தந்தாலும், இதனையே பயனாளர்கள் விரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆர். புனிதா முருகன், நெய்வேலி.

நம் தனி நபர் தகவல்களைத் திரட்டுவதில், விண்டோஸ் 10 சிஸ்டமும் ஈடுபடுகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இருப்பினும், இதனைத் தடுக்க தாங்கள் தந்துள்ள 'ஷட் அப் 10' புரோகிராம் குறித்த தகவல் ஆச்சரியமாய் உள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாமா என்று இன்னும் பலரும் தயங்கி நிற்கையில், பயன்படுத்துபவர்களின் ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில், புரோகிராம் ஒன்று இருப்பதை எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது, வாசகர்பால் தங்களின் அக்கறையைக் காட்டுகிறது. மிக்க நன்றி.
பேரா. ஆ. ஸ்ரீதர் ராஜன், திண்டுக்கல்.

எப்படியேனும் விண்டோஸ் 10 சிஸ்டத்தை, விண்டோஸ் பயன்படுத்தி வந்தவர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டு பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கினை, மைக்ரோசாப்ட் பல வழிகளில் மேற்கொள்கிறது. அதன் ஒரு வழிதான், பழைய விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களுக்கான, ஆக்டிவேஷன் கீயினை அனுமதிக்கும் முடிவு. இதனை நாம் வரவேற்கலாம்.
கே. உலகநாதன், திருச்சி.

இணைய தளங்களில், ஆடியோ பிரச்னை இருந்த போதெல்லாம், “இது விளம்பரம், நம்மால் ஒன்றும் செய்திட முடியாது” என்று எண்ணியிருந்தேன். தாங்கள் மிக விரிவாக, அதனை நிறுத்தலாம் என்று வழி காட்டியது, காலத்தே காட்டிய உதவி.
ஆ. கண்ணம்மா, காரைக்குடி.

மோசமான எஸ்.எம்.எஸ்.களை நானும் என் போனில் பெற்று வந்தேன். இது ஹேக்கர்கள் சமாச்சாரம் என்று எண்ணி, இதனைத் தடுக்க முடியாது என்று எண்ணி இருந்தேன். தாங்கள் மிக விரிவாகவும், விளக்கமாகவும், இதனைத் தடுக்கும் வழிகளை வழங்கியுள்ளீர்கள். இதனை கூகுள் நிறுவனமே நன்கு விளம்பரப் படுத்தி இருக்க வேண்டும். தங்களுடைய டிப்ஸ் பலரின் மன உளைச்சலுக்கு விடிவினைத் தருகிறது. நன்றி.
கா. நமசிவாயம், பெரம்பலூர்.

சர்பேஸ் புக் மற்றும் மேக்புக் புரோ ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டும் கட்டுரை மிகவும் படிப்பினை தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் பக்கமே, விலை காரணமாகச் செல்லாதவர்களுக்கு இது ஒரு நல்ல பாடக் கட்டுரை போல அமைந்துள்ளது. கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
எஸ். சாமுவேல் தனராஜ், புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X