விண்டோஸ் 10 தரும் கூடுதல் பாதுகாப்பு வளையங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து, ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், இதன் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் குறித்து பாராட்டி வருகின்றனர். இதற்காகவே, நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர், இதனைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிஸ்டத்தில், பாதுகாப்பு தரும் ஐந்து வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒருங்கிணைந்த பல அடுக்கு இசைவு: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பயனாளர்கள் தங்கள் டேட்டாவினைப் பல அடுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு வளையத்திலும், இசைவான நிலை ஏற்பட்டாலே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர் டேட்டாவினை அணுக முடியும். முதலாவதாக, பயோமெட்ரிக் வழியில் பாதுகாப்பு. பயனாளர்கள், பாஸ்வேர்ட் போன்ற, சிலரால் அறிந்து கொள்ள இயலும் வழிகளுக்குப் பதிலாக, பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தலாம். விரல் ரேகை ஸ்கேன் செய்து அமைத்தல், விழி ரேகை அறிந்து வழி விடல் போன்ற வசதிகளைப் பயன்படுத்த, விண்டோஸ் 10 செயலிகளைக் கொண்டுள்ளது. Fast Identity Online Alliance என்னும் பன்னாட்டளவிலான வரையறை கொண்ட செயல்முறையை, விண்டோஸ் 10 சப்போர்ட் செய்கிறது. பயனாளர்கள், இவற்றிற்கான ஹார்ட் வேர் சாதனங்களைப் பெற்றுப் பயன் படுத்த வேண்டும். எனவே, தனி நபர் பயன்பாட்டினைக் காட்டிலும், நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் இதனை மேற்கொள்ளலாம்.

சுருக்கப்பட்ட தொகுதிகள்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பெரும்பாலான பயனாளர்கள், தனிநபர் பயன்பாட்டிற்கும், தங்களின் தனிப்பட்ட அலுவல் சார்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிந்து வைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய Enterprise Data Protection தொழில் நுட்பம், மிக ரகசிய டேட்டாவினை, அதனைச் சுருக்கி அமைக்கும் தொகுதிகள் (encrypted containers) மூலம் பாதுகாக்கிறது. இது buffer எனப்படும் இடைத்தேக்ககமாகச் செயல்படுகிறது. அதே கம்ப்யூட்டரில் செயல்படும் மற்ற செயலிகளின் செயல்பாட்டிலிருந்து டேட்டா பாதுகாக்கப்படுகிறது. டேட்டாவினை நிர்வகிப்பவர்கள், ஒவ்வொரு வகை டேட்டாவிற்கும், சர்வர்களின் பெயர், மற்றும் நெட்வொர்க் பெயர்களை அமைத்து, மற்ற தனிநபர் செயல்பாட்டிலிருந்து இவற்றைக் காப்பாற்றலாம். இத்தகைய இடைத்தேக்ககத்திற்குச் செல்ல வேண்டிய டேட்டாவினை வகைப்படுத்திப் பெயர் இட்டுவிட்டால், அவை தானாக, சுருக்கப்பட்டு, இந்த தேக்ககங்களுக்குச் சென்றுவிடும். பின்னர், தகுந்த உரிமை பெற்றவர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தேக்ககத்திலிருந்து, குறிப்பிட்ட டேட்டா விரிக்கப்பட்டு தரப்படும்.

வலைப் பின்னல்களுக்குத் தனி அடையாளம்: இன்றைய அளவில், பல நிறுவனங்கள், Virtual private networks எனப்படும் தன்னளவிலான மெய்நிகர் வலைப்பின்னலைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இவற்றில் பல பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதை, இதன் நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர்.
இந்த வலைப் பின்னலைப் பயன்படுத்துபவர்கள், மால்வேர் மற்றும் தேவையற்ற செயலிகளை, நிர்வாக அலுவலகத்தின் இத்தகைய வலைப்பின்னல்களில் இணைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எப்போதும் உள்ளது. விண்டோஸ் 10ல் இதற்கான பாதுகாப்பு வளையம் தரப்பட்டுள்ளது. மெய்நிகர் வலைப்பின்னலை நிர்வகிப்பவர்கள், பயனாளர்கள் தொடர்பு கொள்கையில், அவர்களைக் குறிப்பிட்ட போர்ட் மற்றும் ஐ.பி. முகவரிகளுக்குள் மட்டும் அனுமதிக்க விண் 10 அனுமதிக்க வழி வகைகளைத் தருகிறது.

தனித் தொகுதிகளாக நம் செயலிகள்: விண்டோஸ் 10 சிஸ்டம், செயலிகளைத் தனிமைப் படுத்தி வைப்பதில் (application whitelisting) மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தருகிறது. அலுவலக நிர்வாகிகள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற செயலிகளைப் பட்டியலிட்டு வைத்துக் கொள்ளலாம். அல்லது, விண்டோஸ் ஸ்டோரில், தங்களுக்கென ஒரு பகுதியை அமைத்து, அதில் தங்களுக்கான செயலிகளை ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான எட்ஜ் பிரவுசர்: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்படும் 'எட்ஜ்' பிரவுசரைப் பயன்படுத்துவது பல செயல்பாடுகளுக்கு அனுகூலமாக உள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. அதன் இடத்தில், மாறா நிலையில், புதிய பிரவுசரை Edge என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் செயல்பாடு இதுவரை பயன்படுத்தப்படாத தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல புதிய பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த பிரவுசரில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த ActiveX தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால், இந்த தொழில் நுட்பப் பயன்பாட்டினால் தான், பல ஹேக்கர்களுக்கு வழி தந்த பிழையான குறியீடுகள் ஏற்பட்டன என்று மைக்ரோசாப்ட் கண்டறிந்துள்ளது. எட்ஜ் பிரவுசர் sandbox தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. இது இணைய தளங்களைத் தனித் தொகுதியாகக் கொண்டு சென்று சோதனை செய்கிறது. இதனால், ரகசிய டேட்டாவினை இவை அணுக இயலாது.
இறுதியாக நமக்கு அளிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த sandbox தொழில் நுட்ப பயன்பாடு, பயனாளர்கள் விருப்பப்பட்டால் பயன்படுத்திப் பார்க்கும் வகையில் தரப்பட்டது. ஆனால், எட்ஜ் பிரவுசரில் அது மாறா நிலையில் தரப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X