இந்தியாவில் எதிர்காலத் திட்டங்கள் : மைக்ரோசாப்ட் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2015
00:00

நவம்பர் முதல் வாரத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் தான் மேற்கொள்ள இருக்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டது. மிகப் பெரிய அளவில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த வாடிக்கையாளர் சந்திப்பில் தன் பல்வேறு புதிய தொழில் தொடக்கங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. பல நிறுவனங்களுடன் கூட்டு முயற்சி மற்றும் பல புதியன குறித்து அறிவிப்புகள் வெளியாயின. இவை, இந்திய நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் புதிய வர்த்தக தளங்களைக் கண்டறிய உதவும். அவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் இந்திய மக்கள் புதிய அனுபவங்களைப் பெறுவார்கள்; மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள புதிய சாதனங்கள் மற்றும் புதுவகை க்ளவ்ட் சேவை, இந்தியாவில் தற்போது ஏற்பட்டு வரும் டிஜிட்டல் புரட்சிக்கு உதவிடும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் + ஜஸ்ட் டயல்: இரு நிறுவனங்களும் இணைந்து 'பிங்' தேடல் சாதனத்தின் மூலம் புதிய வசதிகளைத் தர செயல்படும். க்ளவட் சேவை அடிப்படையிலான ஆய்வு மூலம் வாடிக்கையாளர்கள் சிறப்பான அனுபவம் பெறும் வகையில் செயல்பாடுகள் இருக்கும். ஜஸ்ட் டயல் நிறுவனம் தன் இணைய தளத்தில், 'பிங்' தேடல் சாதனத்தின் தொழில் நுட்பத்தினை இணைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாட்ப் + பே டி.எம்: மைக்ரோசாப்ட், Paytm app மற்றும் Paytm Wallet செயலிகளைத் தன் Cortana செயலியுடன் ஒருங்கிணைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டணத்தை எளிதாகச் செலுத்த முடியும். மொபைல் போன்களில் இந்த நிதி பரிமாற்றங்களை எளிதில் மேற்கொள்ள இயலும். பே டி.எம்., மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'ஆபீஸ் 365' தொகுப்பினை, வர்த்தகர்கள் குறித்த தகவல்கள் மற்றும் நிதிக் கணக்கு வழக்கினை நிர்வகிக்கப் பயன்படுத்தும். அத்துடன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சப்போர்ட் சேவைகள் விற்பனையினை, பே டி.எம். செயலி எளிமையாக்கும்.

மைக்ரோசாப்ட் + ஸ்நாப் டீல்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் கட்டமைப்பினை, ஸ்நாப் டீல் பயன்படுத்தி, டிஜிட்டல் தானியங்கி விநியோகஸ்தர் கட்டமைப்பினை ஏற்படுத்தும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் பொருட்கள் வாங்கும்போது, முடிவெடுப்பது எளிதாக இருக்கும். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஸ்நாப் டீல் Snapdeal Motors என்னும் பிரிவினைத் தொடங்கியது. இது மைக்ரோசாப்ட் க்ளவ்ட் கட்டமைப்பில் செயல்படும். ஸ்நாப்டீல் வாடிக்கையாளர்களுக்கு புதிய வகையில் சேவைகளை வழங்க, இரு நிறுவனமும் இணைந்து ஸ்கைப், பிங் மற்றும் கார்டனா செயலிகளைச் செயல்படுத்தும்.
இந்த முடிவுகளை அறிவித்த அதே சந்திப்பில், மைக்ரோசாப்ட் சாதனங்களின் இந்திய அறிமுகம் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகின. 'சர்பேஸ் ப்ரோ 4' எனப் பெயரிடப்பட்டுள்ள நவீன சர்பேஸ் டேப்ளட் சாதனம், வரும் ஜனவரியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் சர்பேஸ் டேப்ளட் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. 'சர்பேஸ் ப்ரோ 4' டேப்ளட் பி.சி., 2736×1824 பிக்ஸெல் திறனுடன், 12.3 அங்குல திரையுடன், இன்டெல் ஸ்கைலேக் ப்ராசசருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக, 1 டெரா பைட் அளவில் சாலிட் ஸ்டேட் ஹார்ட் டிஸ்க்குகளைப் பயன்படுத்த முடியும். இதன் வெளிக் கவசம், மிகவும் குறைவான தடிமன் உடையதாக, மெக்னீசியத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.
விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் (Lumia 950 and Lumia 950 XL) டிசம்பர் மாதம் அறிமுகமாகவுள்ளன. அண்மையில் வெளியான, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் கொண்டு வெளியாகும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்களாக இவை இருக்கும்.
லூமியா 950 ஸ்மார்ட் போனில், AMOLED டிஸ்பிளே கொண்ட 5.2 அங்குல அளவிலான திரை உள்ளது. பின்புறமாக, 20 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பியூர்வியூ கேமரா தரப்பட்டுள்ளது. இதில், LED RGB ப்ளாஷ் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இதில், 1.8 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் Snapdragon 808 சிப்செட் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது.
லூமியா 950 எக்ஸ்.எல்., 7 அங்குல அளவில் திரை கொண்ட ஒரு பேப்ளட் (phablet) ஆகும். இதுவும், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்குகிறது. 64 பிட், ஆக்டா கோர் Qualcomm Snapdragon 810 சிப்செட் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. பின்புறமாக, 20 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பியூர்வியூ கேமரா தரப்பட்டுள்ளது. இதில், LED RGB ப்ளாஷ் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இதன் பேட்டரி 3,340 mAh திறன் கொண்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X