பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2015
00:00

இணையம் குறித்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல, எதிர்பாராத இலக்குகளில் எல்லாம், இணையம் விரிவடைந்து வருகிறது. ஆனால், எந்த திசையில் சென்றாலும், அது மனித இனத்தின் நன்மைக்கே என்ற வகையில் தான் செல்கிறது. நமக்குக் கூடுதல் வசதிகளைத் தந்து, வாழ்க்கையை எளிதாக்கி வருகிறது. இதனை எடுத்துக் காட்டுகளுடன் நீங்கள் எழுதியது சிறப்பாக உள்ளது. இன்னும் என்ன சாதிக்கும் எனவும் நீங்கள் கோடி காட்டியிருக்கலாம்.
எஸ்.கே. உஷா சிவராஜ், கரூர்.

”Knoword” தளம் குறித்த தங்கள் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை. குறிப்பிட்ட தளம் சென்று, அது தரும் மூன்று நிலைகளிலும் விளையாடினேன். நான் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழி படித்திருந்தும், ஒரு சில சொற்களையே கண்டறிய முடிந்தது. இருப்பினும், நாம் அதிகச் சொற்களைக் கற்றுக் கொள்ள இந்த தளம் உதவுகிறது. நமக்குச் சவால் விடுவதனாலேயே, நாம் அதிகம் ஈர்க்கப்படுகிறோம். கேண்டி க்ரஷ் சாகா போன்ற விளையாட்டுகளை விளையாண்டு, பொழுதை வீணாக்குவதனைக் காட்டிலும், இது போன்ற தளங்கள் நமக்குப் பயனுள்ளவையாக உள்ளன. தயவு செய்து, வாரந்தோறும் இது போல ஒரு தளம் குறித்து எழுதவும்.
ஆ. செந்தில்நாதன், தக்கலை.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படியும் நூறு கோடி சாதனங்களில் கொண்டு செல்லும் தன் இலக்கினை அடைய மைக்ரோசாப்ட் நிச்சயம் பயனாளர்களுக்குச் சாதகமான, எளிமையான, இலவச வழிகளைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ”புதிய திட்டம்” என்ற தலைப்பில் இதனைக் கோடிட்டுக் காட்டிய கட்டுரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்குகளை விளக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளது. பாராட்டுகள்.
என். தங்கையன், கும்பகோணம்.

நமக்கான வசதிகளை நல்ல முறையில் தருவதற்காகத்தான் நம்மைப் பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்வதாக, வாட்ஸ் அப், கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதைப் பயனாளர்களும், தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், என்ன வசதிகளுக்காக, எந்த அளவில் நம் தகவல்களைப் பெற்று வருகின்றனர் என்ற அளவினை இந்த நிறுவனங்கள் இன்னும் தரவில்லை. வெளிப்படையாக இதனைத் தெரிவிக்காதவரை, இந்நிறுவனங்களை நாம் உளவாளிகளாகத்தான் கருத வேண்டும்.
ஆர். ஆராவமுதன், சென்னை.

பெரிய நிறுவனங்கள் நமக்குச் சேவை செய்திடுகையில், நாம் விரும்புகின்றவற்றைத் தருவதற்காக குக்கீ பைல்களை ஏற்படுத்தி நம் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன. அவற்றை வேவு பார்ப்பதாக நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். அறியக் கூடாத தகவல்களை நாம் தான் பாதுகாப்பாக அமைக்க வேண்டும். அதற்கான வழிகளை நாம் இணையத்தில் இருந்தே பெறலாமே!
என். ஜஸ்வந்த் ராஜன், புதுச்சேரி.

'இணையம் வயது 46' என்ற கட்டுரை தரும் தகவல்கள் மிக அருமை. கூகுள், இணையம், மைக்ரோசாப்ட், பேஸ்புக் என முக்கியமான அப்ளிகேஷன்கள் அனைத்திற்கும், அதன் ஆண்டு நிறைவுகளின் போது, நீங்கள் தரும் வரலாற்றுத் தகவல்கள், நாம் கடந்து வந்த டிஜிட்டல் பாதையை நமக்கு ரெப்ரெஷ் செய்து தருகின்றன. இது, கம்ப்யூட்டருக்குத் தற்போது அறிமுகமாகின்றவர்களுக்கும், குறிப்பாக, அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கின்றன. உங்களுடைய பணிக்கு என் பாராட்டுகள்.
பேரா. டாக்டர் மு.சிவசுப்பிரமணியம், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X