"தெரிந்து கொள்ளுங்கள்”
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2015
00:00

Blind Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது.
பொதுவாக, இது போன்ற பழக்கத்தை நாகரிகம் கருதி யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இது நம்மிடமிருந்து அஞ்சலைப் பெறுபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகும். பெறுபவர்களின் பட்டியலை, மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இதனைப் பயன்படுத்துவார்கள்.

Email Attachment: மின் அஞ்சல் தகவலுடன் அனுப்பப்படும் பைல்கள் இவ்வாறு இமெயில் அட்டாச்மெண்ட் எனக் குறிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில், இவ்வாறு டெக்ஸ்ட்டை பைலாக இணைக்க முடியாது. அஞ்சல் அனுப்புபவர், தானாக டெக்ஸ்ட்டை புரோகிராம் ஒன்றின் மூலம் மாற்றி, அஞ்சல் தகவலுடன் ஒட்டி அனுப்புவார். பெறுபவர் இதனை ஒரு புரோகிராம் மூலம் மீண்டும் மாற்றி, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் ஒட்டிக் காண வேண்டும்.
இப்போது எல்லாமே மாறிவிட்டது. மிக எளிதாக எந்த பைலையும் இணைத்து அனுப்பலாம். ஒவ்வொரு மின் அஞ்சல் சேவையும், தங்கள் அஞ்சலுடன் இணைக்கப்படும் பைலுக்கு அளவினை வரையறை செய்துள்ளன. இதற்கும் மேலான அளவில் பைல் அனுப்ப வேண்டும் எனில், அதற்கான் இலவச மற்றும் கட்டண சேவை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.
நவீன மின் அஞ்சல் கட்டமைப்பு, பைல்களை அட்டாச் செய்வதில், MIME என்னும் வரையறையைப் பயன்படுத்துகின்றன. இது பைல்களை இணைப்பது, அனுப்புவது, பெறுவது, இணைக்கப்பட்ட பைலை விரைவாகப் பார்ப்பது என அனைத்தையும் எளிதாக்குகிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.

Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.

USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.

Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.

RAID - Redundant Array of Independent Disks:: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X