சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 நவ
2015
00:00

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, பட்ஜெட் விலையிலான, தன் ஸ்மார்ட் போன்கள் இரண்டை, சாம்சங் நிறுவனம் Galaxy On5 மற்றும் On7 என்ற பெயர்களில் விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இதன் தொழிற்சாலையில் முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட போன்களாக இவை வெளிவந்துள்ளன. இந்த இரண்டும், 4ஜி அலைவரிசை போன்களாகும். இவற்றில் தரப்படும், UDS (Ultra Data Saving) Mode மற்றும் 4G Download Booster என்ற இரு வசதிகளும், பயனாளர்களுக்கு ஒரு புதிய வித்தியாசமான அனுபவத்தினைத் தரும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய இளைஞர்கள் எப்போதும் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதே நேரத்தில், தாங்கள், ஸ்மார்ட் போன்களுக்கென செலவழிக்கும் பணத்திற்குத் தரமான மொபைல் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதனை உறுதி செய்திட எண்ணுகின்றனர். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காகவே, இந்த போன்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்படுவதாக, சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
சாம்சங் ஓ.என்.5 சிறப்பம்சங்கள்: இதன் திரை 5 அங்குல அளவிலானது. 720X1280 பிக்ஸெல் திறனுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. இதன் பின்புறக் கேமரா, 8 எம்.பி. திறனுடன், எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்டு செயலாற்றுகிறது. முன்புறமாக உள்ள செல்பி கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு எல்.டி.இ. (4ஜி), யு.எஸ்.பி, வை பி, மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இதன் பரிமாணம் 142.3 x 72.1 x 8.5 மிமீ. எடை 149 கிராம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட்5.1. லாலிபாப் ஆக உள்ளது. விநாடிக்கு 30 பிரேம் என்ற வேகத்தில் விடியோ பதிவினை, இதன் கேமரா மேற்கொள்கிறது. அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார்களும் இயங்குகின்றன.
சாம்சங் ஓ.என்.7 சிறப்பம்சங்கள்: இதன் திரை 5.5 அங்குல அளவிலானது. 720x1280 பிக்ஸெல் திறனுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. இதன் பின்புறக் கேமரா, 13 எம்.பி. திறனுடன், எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்டு செயலாற்றுகிறது. முன்புறமாக உள்ள செல்பி கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு எல்.டி.இ. (4ஜி), யு.எஸ்.பி, வை பி, மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இதன் பரிமாணம் 151.8 x 77.5 x 8.2 மிமீ. எடை 171 கிராம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட்5.1. லாலிபாப் ஆக உள்ளது. விநாடிக்கு 30 பிரேம் என்ற வேகத்தில் விடியோ பதிவினை, இதன் கேமரா மேற்கொள்கிறது. அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார்களும் இயங்குகின்றன.
Galaxy On5 ஸ்மார்ட் போன் ரூ.8,999 மற்றும் Galaxy On7 ஸ்மார்ட் போன் ரூ.10,990- என விலையிடப்பட்டுள்ளன. சென்ற நவம்பர் 4 முதல், ப்ளிப் கார்ட் இணைய தளத்தில், கருப்பு மற்றும் தங்க வண்ணங்களில் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X