கேண்டி க்ரஷ் உரிமை மாறுகிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2015
00:00

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு நிலையில், விரும்பி விளையாடும் விளையாட்டு கேண்டி க்ரஷ் சாகா. வயது வித்தியாசம் இன்றி, பலரும் இதனை ரசித்து விளையாடி வருகின்றனர். பலரின் அன்றாட வாழ்க்கையில், இணை பிரியாத ஒன்றாக, கேண்டி க்ரஷ் சாகா அமைந்துவிட்டது.
இந்த விளையாட்டு மட்டுமின்றி, மேலும் பல விளையாட்டுகளை உருவாக்கி, அதன் மூலம் மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்டி வரும் நிறுவனம் 'கிங் டிஜிட்டல்' நிறுவனம் ஆகும். அண்மையில், இந்நிறுவனத்தை, விடியோ கேம் உருவாக்கத்தில் முன்னணியில் இயங்கி வரும், “ஆக்டிவிஷன் பிளிஸ்ஸார்ட்” (Activision Blizzard) வாங்கியுள்ளது. இதற்கு கொடுத்த விலை 590 கோடி டாலர்.
இரண்டும் இணைந்த இந்த நிறுவனத்தின் விளையாட்டுகளில், இனி, மாதந்தோறும் 50 கோடி வாடிக்கையாளர்கள் பங்கெடுப்பார்கள். 196 நாடுகளில், வாடிக்கையாளர்கள் இவற்றில் ஈடுபடுவார்கள் என ஆக்டிவிஷன் தலைமை நிர்வாகி பாப்பி கோடிக் அறிவித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும், மொபைல் விளையாட்டுகளில், வாடிக்கையாளர்கள், 2,900 கோடி டாலர் செலவழிப்பார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது, வரும் 2018ல், 4,500 கோடி டாலராக உயரும் வாய்ப்பும் உள்ளது.
தனதாக்கிக் கொண்டுள்ள 'கிங்' நிறுவனப் பிரிவிற்கு, ஆக்டிவிஷன், தன் தொழில் நுட்பங்கள், அனுபவம் மட்டுமின்றி, மூலதன நிதி உதவியும் வழங்கி, புதிய எல்லைகளில் விரிந்து, கூடுதல் இலக்குகளை எட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கிங் தனி நிறுவனப் பிரிவாகவே செயல்படும்.
2003 ஆம் ஆண்டில், கிங் நிறுவனம் தன் வர்த்தகத்தினைத் தொடங்கியது. விளையாட்டுகளை, வாடிக்கையாளர்கள் இலவசமாக விளையாட வழங்கியது. ஆனால், கூடுதல் வசதிகளை, விளையாட்டில் மேற்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். பலர், இதனைச் செலுத்தி விளையாட வேண்டும் என்ற ஆவலோடு கூடிய வெறியைக் கொண்டதனால், இந்நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து உயர்ந்தது.
180 விளையாட்டுகளுக்கு மேல் உருவாக்கி வழங்கினாலும், கிங் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது அதன் 'கேண்டி க்ரஷ் சாகா' மூலம் தான். தினந்தோறும், அதனை 15 கோடியே 8-0 லட்சம் பேர் விளையாடினர். தினந்தோறும் மேற்கொள்ளப்பட்ட விளையாட்டு நிகழ்வின் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியது. மொபைல் போன்களில் விளையாடத் தரப்பட்டதற்கு முன்னர், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் தான் இது கிடைத்து வந்தது. 2012 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதத்தில், பேஸ்புக் தளத்தில் இந்த கேம் தொடங்கியது. எதிர்பாராத வெற்றியையும், லட்சக்கணக்கான ரசிகர்களையும் பெற்றது. பின்னர், நவம்பர் மாதம், ஆப்பிள் போன்களில் இந்த கேம் விளையாடத் தரப்பட்டது. தொடர்ந்து டிசம்பரில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான வடிவிலும் வெளியானது. 2013ல், மிக அதிக அளவில், தரவிறக்கம் செய்யப்பட்ட ஐபோன் அப்ளிகேஷனாக, கேண்டி க்ரஷ் சாகா இடம் பிடித்தது.
ஆனால், 2014 ஆம் ஆண்டில், கிங் வெளியிட்ட பங்கு வெளியீடு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. கேண்டி க்ரஷ் போல இன்னொரு கேம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்ட முயற்சிகள், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதனால், நிறுவனத்தின் வருமானம் குறைந்தது.
Angry Birds கேம் தயாரித்து வழங்கிய ரோவியோ நிறுவனமும், ஏறத்தாழ இதே நிலையைச் சந்தித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தங்களை முன்னிறுத்த, இந்த நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதல் ஆர்வம் ஏற்படும் வகையில், விளையாட்டுகளை வடிவமைத்து வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X