பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2015
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிவது குறித்து மூன்று தெளிவான வழிகளைச் செம்மையாகப் புரியும்படி விளக்கியுள்ளீர்கள். தங்கள் உதவிக்கு நன்றி. பதிந்த பின்னர் ஏதேனும் சிக்கல் வந்தால், எந்த தளத்தினை உதவிக்கு அணுகுவது என்பது குறித்தும் தகவல் தரவும். நன்றி.
என். சியாமளா கணேசன், தஞ்சாவூர்.

நீங்கள் தந்துள்ள விண்டோஸ் 10 பதியும் வழிகளில், முதல் இரண்டு சற்று எளிமையான வழிகள் என்று நினைக்கிறேன். என் எண்ணம் தவறானால், மூன்றாவது வழி குறித்து கூடுதல் டிப்ஸ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். கதிரேசன், மதுரை.

பயனாளர்கள் எல்லை மீறினால், அவர்களைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, ஏற்கனவே தந்து வரும் கூடுதல் இடத்தினை, ஒன் ட்ரைவில் குறைப்பது, மைக்ரோசாப்ட் நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது. இவர்களால், நிர்வகிக்க இயலவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. நிச்சயம் பன்னாட்டளவில் இதற்கு எதிர்ப்பு வந்திருக்கும். மைக்ரோசாப்ட் ஏதேனும் புதிய வகை நடவடிக்கை எடுத்து, பழையபடி அதிக இடம் தரும் என்று எதிர்பார்க்கிறோம்.
எஸ். பரந்தாமன், திருப்பூர்.

ஒன் ட்ரைவில் நிறைய பைல் வைத்துள்ளவர்கள், எப்படியும் கட்டணத்திட்டங்களை எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறது மைக்ரோசாப்ட். இலவச இடம் பயன்படுத்துபவர்களில், குறைந்த அளவிலான எண்ணிக்கையில் பயனாளர்கள், கட்டணம் செலுத்த முன்வந்தாலே, அது நிச்சயம் பெரும் வருமானமாக இருக்கும். மைக்ரோசாப்ட் கணக்குப் போட்டுத்தான், இந்த இடம் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
டி.கே. சம்சுதீன், திருநெல்வேலி.

விண்டோஸ் 10ல் கூடுதல் பாதுகாப்பு வளையங்களை மைக்ரோசாப்ட் தந்திருப்பது, அது தன் பழைய தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டதனையே காட்டுகிறது. இந்த வகையில், அது வாடிக்கையாளர்களின் பயத்தைப் போக்கினால், அதுவே அதற்கு வெற்றியைத் தரும்.
எம். மாலதி, கோவை.

மைக்ரோசாப்ட் இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, இசைந்து செயல்பட இருப்பது நமக்கு லாபம் தான். இதன் தொழில் நுட்பம் நம் வாழ்வின் பல நிலைகளில் கூடுதல் வசதிகளை அளிக்கும். இதனை நம் அரசு வரவேற்று கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும்.
கா. அறிவழகன், சென்னை.

நீங்கள் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் செயல்பட்டு, சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கி, சின்ன பிரச்னையைச் சரி செய்து கொண்டேன். எந்த பிரச்னை என்றாலும், கடத்தாமல், பொறுமையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பதிலாகத் தந்தமைக்கு நன்றி.
பெஞ்சமின் தனராஜ், நாகப்பட்டினம்.

ஸ்டிக்கி நோட்ஸ் பயன்பாடு நமக்கு மிகவும் உதவும் ஒன்றாகும். ஆனால், இது குறித்து அறியாததனால், பலர் இதனைப் பயன்படுத்துவதே இல்லை. உங்களின் விரிவான பதில் மற்றும் விண்டோஸ் 10 கட்டுரையில், ஸ்டிக்கி நோட்ஸ் ப்ரோ குறித்த தகவல், பலரை இதனைப் பயன்படுத்த வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. கம்ப்யூட்டர் மலரின் அனைத்து பக்கங்களும், மிக மிகப் பயனுள்ள தகவல்களைத் தாங்கி வருவதில் மிக்க மகிழ்ச்சி அடையும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜே. ஆர். கண்ணபிரான், திருவாரூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X