பட்ஜெட் விலையில் லாவா ஆண்ட்ராய்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2015
00:00

Lava Iris X8 என்ற பெயரில், அண்மையில், அதிக பட்ச விலையாக ரூ. 8,349 விலையிட்டு, ஆண்ட்ராய்ட் போன் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. 720 x 1280 பிக்ஸெல் திறனுடன், 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இது எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். எம்.பி. 3 பிளேயர், டாகுமெண்ட் வியூவர் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 143.4 x 71 x 8.6 மிமீ. எடை 160 கிராம். எம்.பி. 3 பிளேயர், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை ஆடியோ அனுபவத்தைச் சிறப்பாக்குகின்றன. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் துணையுடன் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் பின்புறக் கேமரா, 8 எம்.பி. திறனுடன், 3264 x 2448 பிக்ஸெல் அடர்த்தியுடனான படங்களைத் தரும் வகையில் இயங்குகிறது. வீடியோவும் பதியலாம். முன்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடன் உள்ளது. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டதாகத் தரப்படுகிறது. இதன் மூலம், 9 மணி நேரம் 40 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 291 மணி நேரம் மின்சகதி தங்குகிறது.
லாவா நிறுவனத்தின் இன்னொரு விலை குறைவான ஆண்ட்ராய்ட் போனாக, Lava Iris X1 Grand வெளிவந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,649 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இயக்குகிறது. டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட, 8 எம்.பி. திறனுடன் இயங்கும் ஆட்டோ போகஸ் கேமரா, பின்புறமாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்.பி. 3, எம்.பி. 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 71.8x143x8.9 மி.மீ. இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீனில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை பி, புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பின்புறக் கேமரா, 8 எம்.பி. திறனுடன் ஆட்டோ போகஸ் வசதியும், டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டதாக உள்ளது. வீடியோவும் பதியலாம். முன்புறக் கேமரா 2 எம்.பி.
திறனுடன் உள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. பலவகையான சென்சார்கள் இதனை நவீன ஸ்மார்ட் போனாகக் காட்டுகின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி, 2,200 mAh திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X