இரண்டு மாடல்களில் ஜியோனி எப் 103
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2015
00:00

ஜியோனி மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், அண்மையில், தன் எப் வரிசையில், எப் 103 என்னும் பெயரில், இரு மாடல் போன்களை, இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஒன்று 1 ஜி.பி. ராம் மெமரியுடனும், அடுத்தது 3 ஜி.பி. ராம் மெமரியுடனும் அமைந்துள்ளது. செப்டம்பரில், இந்த மாடல் 2 ஜி.பி. ராம் மெமரியுடன் வெளியானது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போன் என அறிவிக்கப்பட்டது. தற்போது, ராம் மெமரியில் சற்று வேறுபாட்டுடன் இரு மாடல்கள் வந்துள்ளன. இவற்றின் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1280 × 720 பிக்ஸெல் திறனுடன், எச்.டி. ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டும் 5 அங்குல திரை; அதனுடன் ட்ரேகன்ட்ரெய்ல் (Dragontrail) கிளாஸ் பாதுகாப்பு. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் 64 பிட் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட MediaTek MT6735 குவாட் கோர் ப்ராசசர், 1/2/3 ஜி.பி. ராம் மெமரி, 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் இயக்க வசதி, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா என வசதிகளை இந்த மாடல் போன்கள் கொண்டுள்ளன.
இவற்றின் பரிமாணம், 146×70.3×7.95 மிமீ என ஒரே அளவிலேயே உள்ளன. தடிமன் 7.9 மிமீ. பின்புறம் கண்ணாடி போலத் தோற்றமளிக்கும் வகையில் ஷெல் தரப்பட்டுள்ளது. சுற்றிலும் உலோகத்தாலான பிரேம் உள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் 4ஜி சேவையை ஏற்று இயங்கும் தொழில் நுட்பம் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். இயங்குகின்றன. இவற்றில் தரப்பட்டுள்ள பேட்டரி 2,400 mAh திறன் கொண்டதாக உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த மாடல் போன்கள் கிடைக்கின்றன. ஒரு ஜி.பி. மெமரி உள்ளது ரூ.8,999, 3 ஜி.பி. உள்ளது ரூ. 9,999 என அதிக பட்ச விலையிடப்பட்டு கிடைக்கின்றன. முதலில் வெளியிடப்பட்ட இந்த போனின் 2 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9.999 என விலையிடப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X