மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளேஸ் 4ஜி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2015
00:00

அக்டோபர் மாதம், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய கேன்வாஸ் பிளேஸ் 4ஜி க்யூ400 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதன் விலை ரூ.6,999 என அறிவிக்கப்பட்டது. தற்போது, Canvas Blaze 4G Q400 என்ற பெயரில், அதே வரிசையில் அடுத்த போனை வெளியிட்டுள்ளது. இது, eBay.in வர்த்தக இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இதன் திரை 4.5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல் திறனுடன், FWVGA வகை டிஸ்பிளே தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவாட் கோர் ப்ராசசர் சிப் MediaTek MT6735M SoC இணைக்கப்பட்டுள்ளது. பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்டுள்ள கேமரா இயங்குகிறது. இதன் பெயரில் குறிப்பிட்டிருப்பது போல, இது 4ஜி அலைவரிசைத் திறனுடன் சிறப்பாக இயங்குகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மெமரி கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம்.
ஆடியோ ரசனைக்கென எப்.எம்.ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,750 mAh. இந்த மாடல் ஸ்மார்ட் போன் கருப்பு வண்ணத்தில் வெளியாகியுள்ளது. இணைய தளத்தில், இதன் அதிக பட்ச விலை ரூ. 6,199 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X