சோனி வழங்கும் முதல் 4கே ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 டிச
2015
00:00

4கே ரெசல்யூசன் திறன் கொண்ட திரை கொண்ட முதல் ஸ்மார்ட் போனை, சோனி அண்மையில் வெளியிட்டுள்ளது. Xperia Z5 Premium என்ற போன் இந்த திரையைக் கொண்டுள்ளது. மிக உயர்ந்த ஹை டெபனிஷன் ("ultra-high definition") தரத்தில் விடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டு, அதே தரத்தில் விடியோ வெளிப்பாடு, இதன் 5.5 (14 செமீ.) அங்குல திரையில் இருக்கும். இந்த வகை திரை இதுவே, உலக அளவில் முதல் திரையாகும்.
இது ஐபோனில் உள்ள திரையின் திறனைப் போல, நான்கு மடங்கு பிக்ஸெல் கொண்டதாக இருக்கிறது. டிஸ்பிளே துல்லியத்தில், இதன் போட்டி நிறுவனங்களான எல்.ஜி. மற்றும் சாம்சங் வெளியிட்ட திரைகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. ஒரு சதுர அங்குல திரையில், 801 பிக்ஸெல்கள் காட்டப்படும். பிக்ஸெல் அடர்த்தி எந்த அளவிற்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு திரைக் காட்சி துல்லியமாக இருக்கும்.
இந்த அடிப்படையில் தான், ஆப்பிள் நிறுவனம் தன் “ரெடினா” திரைகளை அமைக்கிறது. ஆனால், சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள், தங்கள் போன்களில் 2கே ரெசல்யூசன் கொண்டு திரைக் காட்சிகளைத் தருகிறது. சாம்சங் போன் திரைகளில் அடர்த்தி 577, எல்.ஜி. போன் திரைகளில் 583 ஆகவும் உள்ளன. ஆப்பிள் ஐபோன் ப்ளஸ் இந்த வகையில் 440 பிக்ஸெல் அடர்த்தி கொண்டுள்ளது. சோனியின் முந்தைய போன்களின் திரை பிக்ஸெல் அடர்த்தி 423 ஆக உள்ளது.
சரி, எதற்காக 4கே ரெசல்யூசன் ஸ்மார்ட் போனில் தேவைப்படுகிறது?
“போன்களின் திரைகளை, பிக்ஸெல் அடர்த்தி என எடுத்துக் கொண்டால், அதில் 76 வகை டிஸ்பிளே உள்ளன. ஆனால், ஒன்பது வகைகள் மட்டுமே, போட்டியில் உள்ளன. இவற்றில் எதுவும் 2கே ரெசல்யூசனைக் கூடக் கொண்டதில்லை. எனவே, அதிகம் வேண்டும் எனில், அது 1080p என்ற அளவினைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என முயன்றால், நமக்கு 4கே தான், ஒரே தீர்வாக இருக்கும்” என சோனி நிறுவனத்தின் டிஸ்பிளே தொழில் நுட்ப பிரிவின் தலைவர் டகோ யாகி தெரிவித்துள்ளார்.
5.5. அங்குல அளவே உள்ள திரையில், 4கே ரெசல்யூசனைக் கொண்டு வருவது, போனின் தரத்தை, வாடிக்கையாளர்களிடம் உயர்த்திக் காட்டுமா என்பது இனிமேல் தான் தெரியவரும். 4கே ரெசல்யூசன் என்றாலும், போனில் உள்ள பேட்டரி வழக்கம் போல உழைக்கும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
4கே ரெசல்யூசன் திரை கொண்ட Z5 Premium ஸ்மார்ட் போனில், ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. ஆகவும், ராம் மெமரி 3 ஜி.பி. ஆகவும் உள்ளன. குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த ப்ராசசர் அதிக சூடாவதாக ஏற்கனவே புகார்கள் வந்தன. சோனியின் பிற போன்களில், இந்த பிரச்னை ஏற்பட்டதாகப் பலர் குறை கூறினர். இந்த புதிய Z5 Premium போனில் இந்தப் பிரச்னை வருமா என இனிமேல் தான் தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும், இந்த புதிய திரையை அனைவரும் வரவேற்பார்கள் என சோனி எதிர்பார்க்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X