அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து, இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மாதம், இந்த ஆண்டு 2015 இறுதியில், இந்த பட்டியலில், அமெரிக்காவினை மிஞ்சி, இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
2015 ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில் 40 கோடியே 20 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவில், இந்த எண்ணிக்கை 30 கோடியாக இருக்கும். இந்த தகவலை, இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (Internet and Mobile Association of India (IAMAI)) தெரிவித்துள்ளது. IMRB International (Market research firm) அமைப்புடன் இணைந்து இந்த முடிவினை அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும், 45% கூடுதலாக, இந்தியாவில் இணையத்தினை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைக்கு, சீனா இந்த வகையில், 60 கோடி இணைய பயனாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. மேலே சொல்லப்பட்ட அறிக்கைகளில் உள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், இந்தியா, இணையப் பயனாளர் வரிசையில் இரண்டாவது இடத்தை உலக அளவில் பெறும்.
மேலே சொல்லப்பட்ட அறிக்கைகளில், இன்னும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் தான், இந்தியாவில் இணையப்பயன்பாடு வேகமாகப் பரவி வருகிறது. ஒரு கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து, 10 கோடி என்ற எண்ணிக்கையைப் பெற இந்தியாவிற்குப் பத்து ஆண்டுகள் பிடித்தன. ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் இணைய மக்கள் தொகை, 10 கோடியிலிருந்து 20 கோடியாக உயர்ந்தது. 2014ல் இது 37.5 கோடியாக இருந்தது. விரைவில், 2015 முடியும் தறுவாயில், இது 40 கோடியைத் தாண்டியதாக இருக்கும்.
மேலும், 2015 ஆம் ஆண்டு தொடக்கத்தில், மொபைல் போன்களின் விலை கணிசமாகக் குறைந்தது. இதுவும், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதுல் காரணமாய் இருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இணையப் பயனாளர்களில், ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 71% ஆண்களும், 29% பெண்களுமாக உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை தொடர்ந்து 50% அதிகரித்து வருகிறது. பெண்களின் எண்ணிக்கை 46% அதிகரித்து வருகிறது.
இந்திய நகரங்களில், இணையப் பயனாளர்களில் ஆண், பெண் விகிதம் 62:38 ஆக உள்ளது. இந்தியக் கிராமங்களில், இணையம் பயன்படுத்துவோரின் வயது 18 முதல் 30க்குள்ளாக உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும், இணையம் பயன்படுத்துபவர்களில், வேலை எதுவும் பார்க்காமல் வீட்டில் உள்ள பெண்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 97% உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொபைல் வழி இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு மட்டும், இந்த வகையில், 65% வளர்ச்சி ஏற்பட்டது. இதே நிலை, கிராமப்புறங்களிலும் தற்போது ஏற்பட்டு வருகிறது. தற்போது 8.7 கோடியாக உள்ள எண்ணிக்கை, அடுத்த ஆண்டு இறுதியில், 10.9 கோடியாக இருக்கும் என்று ஆய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X